லக்னோ (20 டிச 2019): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது.
போலீஸ் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப் பட்டது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நேற்று போலீஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வன்முறை சம்பவங்களில் 5 பேர் பலியானதாக அம்மாநில போலீஸ் டி.ஜி.பி., ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் இருவர் பிஜ்னோர் மாவட்டத்தையும் இதர மூன்று பேர் பிரோசாபாத், சம்பல் மற்றும் மீரட் மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மங்களூர் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 3பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.