புதுடெல்லி (05 பிப் 2020): முஸ்லிம் பெண்களின் சகோதரனான பிரதமர் மோடிக்கு முஸ்லிம் பெண்களை கண்டு ஏன் அச்சப்படுகிறார்? என்று அசாதுத்தீன் உவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது , குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஷஹீன் பாக்கில் டிசம்பர் 15 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு AMIM தலைவர் உவைசி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி, எ.பி.ஆர் ஆகியவற்றிற்கு இடையே ஒற்றுமை இல்லை என்பதை பிரதமர் முழுமையாக விளக்க வேண்டும் என்றும் உவைசி தெரிவித்தார்.