லக்னோ (25 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் போலீசார் நடத்திய கொலை வெறி தாக்குதலை தொடர்ந்து உத்திர பிரதேசத்தில் பலர் உயிரிழந்தனர். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
போலீசாரே முன்னின்று நடத்திய இந்த வன்முறையில் பல வாகனங்கள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆனையம் நீதிமன்றத்தை கோரியிருந்தது.
இந்நிலையில் நீதிபதி கோவிந்த் மத்தூர், ஜஸ்டிஸ் ஸ்மித் கோபால் அடங்கிய குழுவை நியமித்து அவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிகடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் கோரியிருந்தது.
அவர்கள் அளித்த அறிக்கையின்படி, போலீசார் நடத்திய வன்முறை உறுதி படுத்தப்படதை அடுத்து உபி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.