இந்தியாவில் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசாக்களும் ரத்து!

Share this News:

புதுடெல்லி (06 மே 2020): இந்தியா வருவதற்காக வெளிநாட்டினருக்‍கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசா அனுமதிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தூதரகப் பணிகள், அலுவல்பூா்வ பணிகள், ஐ.நா.சா்வதேச அமைப்புகளின் பணிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில பிரிவுகள் தவிர, இதர பிரிவுகளில் வழங்கப்பட்டிருந்த அனைத்து விசா அனுமதிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கும் வரை இந்த விசா அனுமதி ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம், ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சிக்கித் தவித்து வரும் வெளிநாட்டவா்களுக்கான விசா, எவ்வித கட்டணமும் இன்றி நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.


Share this News: