ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு திடீர் நீக்கம்!

Share this News:

புதுடெல்லி (07 ஆக 2021): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் பெற்றோரின் படத்தை பகிர்ந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தியின் வாகனத்தில் சிறுமியின் பெற்றோர் உடனான உரையாடலில் பெற்றோரின் முகங்களை தெளிவாக வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ராகுல் சர்சைக்குரிய ட்விட்டை பகிர்ந்தற்காக, ராகுலுக்கு எதிராக டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது.

ராகுல் காந்திக்கு எதிராக தேசிய சிறுவர் உரிமைகள் ஆணையமும் ட்விட்டர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. ராகுலின் ட்வீட்டை நீக்குமாறு ஆணையம் ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராகுல் காந்தி மற்ற சமூக ஊடகங்களில் செயலில் இருப்பார் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply