ஸ்பெயின் (12 நவ 2019): டெங்கு காய்ச்சல் கொசுக்களால் மட்டுமல்ல உடலுறவு கொள்வதாலும் பரவும் என்று ஸ்பெயினில் நடத்தப் பட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகின்றது. அதேவேளை டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு வைத்துக் கொள்வதாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதை ஸ்பெயின் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர், கடந்த செப்டம்பரில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த தனது துணையுடன் அவரது துணையுடன் உடல் உறவில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அவரது துணைக்கும் டெங்கு இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. இதனால் உடலுறவாலும் டெங்கு பரவும் என்பது உறுதியாகி உள்ளது.