துபாய் (07 டிச 2022): சக ஊழியரை மிரட்டியதற்காக மருந்தக மேலாளருக்கு ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் அபராதம் விதித்தது.
மருந்தக மேலாளருக்கும், சக ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையால், சக ஊழியரையும், அவரது மகனையும் கொன்றுவிடுவதாக மேலாளர் மிரட்டியுள்ளார். இதனால் குற்றவியல் நீதிமன்றத்தால் 10000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலாளர் தன்னையும் தனது எட்டு வயது மகனையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்தது.