சவூதியில் வீட்டு வேலை செய்பவரின் இக்காமாவை மூன்று மாதத்திற்கு புதுப்பிக்க முடியுமா?

ரியாத் (27 ஜன 2023): சவூதி அரேபியாவில் பணியாளர்கள் விசாவில் இருப்பவர்கள் 3, 6 மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு இக்காமாவை புதுப்பிக்கலாம் ஆனால் வீட்டு விசாவில் உள்ளவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே இக்காமாவை புதுப்பிக்க முடியும். குடிவரவு சட்டத்தின் படி, வீட்டுப் பணியாளர்களின் இகாமாவை மூன்று மாதங்களுக்கு புதுப்பிக்க முடியாது. பணியாளர் விசாவில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே இகாமாவை மூன்று மாதங்களுக்கு புதுப்பிக்க முடியும். வீட்டுப் பணியாளர் விசாக்கள் இந்த வகையின் கீழ் வராது. எனவே,…

மேலும்...

சவூதியில் வெளிநாட்டவர்களின் இக்காமா புதுப்பித்தல் மற்றும் ரீ என்ட்ரி விசா கட்டணம் சில மாறுபாடுகள்!

ரியாத் (01 ஜன 2022): சவூதி அரேபியா அரசாங்கத்தின் இகாமா மற்றும் ரீ என்ட்ரி கட்டணம் தொடர்பான முடிவுகளில் வெளிநாட்டவர்களுக்கு சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கு ரீ-என்ட்ரி விசா நீட்டிப்பு மற்றும் இகாமா புதுப்பித்தல் ஆகிய கட்டணங்கள் இரட்டிப்பாகும் என்பது புதிய தகவல் இதனை சவூதி அரேபிய முக்கிய ஊடகங்களான சவூதி கெசட், அல்மதீனா உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டவர் சவுதி அரேபியாவில் இருந்தால், மறு நுழைவு கட்டணம் இரண்டு மாதங்களுக்கு 200 ரியால். ஒவ்வொரு…

மேலும்...

சவூதி விசிட் விசாவை குடியிருப்பு விசாவாக மாற்ற முடியுமா? – பாஸ்போர்ட், இக்காமா அலுவலகம் விளக்கம்!

ரியாத் (12 செப் 2022): சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாவில் வந்து தங்கியிருப்பவர்கள் அவர்களது குடியிருப்பு விசாவை மாற்ற முடியாது என்று சவுதி பாஸ்போர்ட் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. விசிட் விசாவில் வருபவர்கள் குடியிருப்பு விசாவிற்கு மாறலாம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியை பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்துள்ளது. சவூதியில் அத்தகைய அமைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு விசாவை மாற்ற உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் குவிந்துள்ளன. இது முற்றிலும் தவறானது என்றும், இதுபோன்ற…

மேலும்...

சவூதி அரேபியாவிலிருந்து விடுமுறையில் சென்ற வெளிநாட்டவர்களின் இக்காமா மற்றும் விசா காலாவதி காலம் மீண்டும் இலவச நீட்டிப்பு!

ரியாத் (28 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் இக்காமா காலாவதி காலம் வரும் ஜனவரி 2022 31 ஆம் தேதி வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான்…

மேலும்...

சவூதியில் இக்காமாவை தவணை முறையில் புதுப்பிக்கும் வசதி அமல்!

ரியாத் (04 நவ 2021): சவூதி அரேபியாவில் தவணை முறையில் இக்காமாவை புதுப்பிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் சவூதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், இக்காமா உள்ளிட்ட ஆவணங்களை மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்க முடியும். மேலும் தொழிலாளியின் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றுவதற்கான அனுமதி உட்பட பல்வேறு சேவைகள் அப்ஷர் இணையதளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் தற்போது நடைமுறையில் உள்ளது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களின் லெவியை மாதம் 800 ரியால் வீதம்…

மேலும்...

குவைத்தில் சட்ட விரோதமாக 60 வயதுக்கு மேல் இக்காமா புதுப்பித்தது குறித்து விசாரணை!

குவைத் (14 ஜூலை 2021): குவைத்தில் 60 வயதுக்கு மேல் உள்ள வெளிநாட்டவர்களின் உரிமத்தை (இக்காமா) புதுப்பித்த அதிகாரிகளுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது. குவைத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 157 வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கள் இகாமாவை புதுப்பித்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 35 ஊழியர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குவைத்தில் இளங்கலை பட்டம் பெற்ற 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு பணி அனுமதி புதுப்பிக்கப்படலாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரிய சிறப்பு கல்வித் தகுதி…

மேலும்...