சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை போராட்டக் களத்தில் குவிந்தபடி உள்ளனர்.
மேலும் எதிர் கட்சித்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் போராட்டக் களத்தில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தும் வருகின்றனர்.
நாளை சட்டசபை தொடங்கும் நிலையில் சென்னை ஷாஹின் பாக் போராட்டம் மேலும் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.