திமுகவுக்கு எச்.ராஜா மிரட்டல்

Share this News:

சென்னை (23 ஜன 2020): திகவுடன் உள்ள் தொடர்பை திமுக முறித்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சிவகங்கையில் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா “ரஜினிகாந்த் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. அன்று நடந்ததைதான் பேசியுள்ளார். அவர் மீது வழக்கு தொடுத்தால் கடவுளர்களை கேவலப்படுத்திய தி.கவின் கி.வீரமணிதான் சிறைக்கு செல்ல வேண்டியதிருக்கும், திகவுடனான தொடர்புகளை திமுக முறித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’ தி.க.வின் நிலைமை தற்போது ஆப்பசைத்த குரங்குபோல் உள்ளது. ஈவெரா அன்றைக்கு இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. வழக்குக்கு சென்றால் அவர்கள்தான் உள்ளே செல்வார்கள்.

மேலும் திகவுடனான தொடர்பை திமுக முறிக்கவில்லை என்றால் விரைவில் மிக பெரிய விளைவுகளை சந்திக்கும்’’ என்றார்.


Share this News:

Leave a Reply