சென்னை (22 பிப் 2020): சென்னைக்கு ஆறு மாதத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையின் மூலம் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பவில்லை என்றாலும் ஓரளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது.
தற்போது சென்னைக்கு கடல் நீர் குடிநீர் திட்டம், வீராணம் ஏரி போன்றவை கை கொடுத்து வருகிறது. 4 ஏரிகளில் இருந்தும் தினமும் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது.
மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் வருகிற கோடை காலத்தை சமாளிக்க கூடிய அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் ஆந்திரா மாநிலம் 1000 மில்லியன் கன அடி தண்ணீரை கூடுதலாக திறந்து விடுவதால் அடுத்த 6 மாதத்துக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.