சென்னை (25 டிச 2022): சுந்தர் பிச்சை கூகுள் தலைமை பொறுப்பையே ஏற்றிருக்க முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கேரளா எம்.பி ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் ஹிந்தியை பயிற்றுமொழியாக்கும் திட்டத்திற்கு எதிராக பேசிய விடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழில் பதிவிட்டுள்ளார்.
இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! Sorry உங்களுக்குப் புரிவதற்காக “ஜாக்த்தே ரஹோ” https://t.co/HLIcAHSpnb
— Kamal Haasan (@ikamalhaasan) December 25, 2022
அதில், ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்துவிடும்.
ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமை பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அந்த டுவீட் மேற்கோள்காட்டி புதிய பதிவை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அந்த பதிவில் , தாய்மொழி எமது பிறப்புரிமை. பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும்.
75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல். வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும். ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.