சென்னை (23 ஜன 2020): கொரொனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில் சென்னைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் உடல் பரிசோதனைக்கு பின்னரே வெளியே அனுமதிக்கப் படுகின்றனர்.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா என்ற வைரஸ் மனிதர்களிடையே பரவத் தொடங்கியுள்ளது. இது மிகவும் ஆபத்தான வைரஸ் என்பதால் உயிரை பறிக்கும் அபாயம் இருக்கிறது. தற்போது வரை சீனாவில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வுஹான், பெய்ஜிங், ஷாங்காய், ஹெனான், தியான்ஜின், ஜேஜியாங் ஆகிய பகுதிகளில் 500க்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையில் இந்த வைரஸ் மேலும் பல நாடுகளுக்கு பரவக்கூடும் என்று அச்சம் உண்டாகி இருக்கிறது. இதனால் அனைத்து நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் தீவிர மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். சென்னை விமான நிலையத்திலும் இம்முறை பின்பற்றப் படுகிறது.