ஊராட்சி மன்றத் தலைவியாகும் 21 வயது கல்லூரி மாணவி!

Share this News:

கிருஷ்ணகிரி (02 ஜன 2020): 21 வயது கல்லூரி மாணவி ஊராட்சி ஊரட்சி மன்ற தலைவியாகியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. இதில் 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 219 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 326 கிராம ஊராட்சி மன்றத்தலைவர்கள், 2,221 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காட்டிநாயக்கன்தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய் சந்தியா ராணி வெற்றி பெற்றார்.

ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய்சந்தியா ராணி, கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜெயசாரதி, ஏற்கனவே கே.என்.தொட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply