ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதுடெல்லி (29 ஜூன் 2021): ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மத்திய அரசு மானிய விலையில் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இவற்றை மாற்றி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கார்டு இருந்தால் ஒருவர் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை பெற்றுக்…