கன்னியாகுமரி தொகுதியில் யார் போட்டி? -வசந்தகுமார் மகன் விளக்கம்!
சென்னை (04 செப் 2020): காங்கிரஸ் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செய்ல்படவுள்ளதாக மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமாி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாா் சில தினங்களுக்கு முன் கரோனா தாக்குதலால் உயிாிழந்தாா். சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அவா் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமரியில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், “அப்பாவின் இழப்பு எங்களையும் தாண்டி…