சவூதியில் கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டு சிறையில் இருந்த இந்தியர் விடுதலை!

ஜிசான் (23 ஜன 2023): கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சவூதி சிறையில் இருந்த இந்தியர் அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த அத்தாவுல்லா ஹக்கீமுல்லா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டிச் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்த நபரின் குடும்பத்திற்காக சவுதி அரசு இழப்பீடு வழங்கியதை அடுத்து அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜிசான் சிறையிலிருந்து விடுதலையான இவர் அபஹா விமான நிலையத்திலிருந்து ஏர்…

மேலும்...

பில்கிஸ் பானு வழக்கு – 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

புதுடெல்லி (23 ஆக 2022): பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை அங்கு நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறியாட்டத்தில் கர்ப்பிணி பெண்ணான 21 வயது பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதோடு அவரது குழந்தை உட்பட 7 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…

மேலும்...

சவூதியில் மரண தண்டனை பெற்ற இந்தியர் விடுதலை!

தம்மாம் (29 ஜூலை 2022):சவூதி அரேபியாவில் மரண தண்டனை பெற்ற இந்தியர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பினார். சவுதி அரேபியா தம்மாமில் ஒரு சலவை நிலையத்தில் பணிபுரிந்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் ஹுசைன் மற்றும் தாமஸ் மேத்தியூ ஆகியோருக்கு இடையே கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் ஜாகிர் ஹுசைன் தாமஸ் மேத்தியூவை கத்தியால் குதியுள்ளார். படுகாயம் அடைந்த தாமஸ் மேத்தியூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளி ஜாகீரை காவல்துறையினர் கைது செய்து…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு துபாயில் கைதிகள் விடுதலை!

துபாய் (27 நவ 2020): ஐக்கிய அரபு எமிரேட் டிசம்பர் 2 தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 472 கைதிகளை விடுவிப்பதாக துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார். விடுவிக்கப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் இருப்பார்கள். ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் சயீத் அல் காசிமி, சிறைகளில் இருந்து 219 கைதிகளை விடுவிப்பதாக அறிவித்துள்ளார். வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கு முழு ஆதரவையும் தருவதாக…

மேலும்...
Advani

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்படஅனைவரும் விடுதலை!

புதுடெல்லி (30 செப் 2020): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்…

மேலும்...

இந்திய தூதரக உயர் அதிகாரிகளை பாகிஸ்தான் போலீஸ் விடுதலை செய்தது!

இஸ்லாமாபாத் (15 ஜூன் 2020): பாகிஸ்தானில் கைதான இரு தூதரக உயர் அதிகாரிகளை பாகிஸ்தான் போலீஸ் விடுதலை செய்துள்ளது. இன்று (திங்கள் கிழமை) காலை தூதரகம் வந்து சேரவேண்டிய இரு அதிகாரிகள் தூதரகம் வந்து சேரவில்லை என்றும். அவர்களை இன்று காலை முதல் காணவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவ்விருவரும் சாலை விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து தற்போது அவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக…

மேலும்...

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை!

ஸ்ரீநகர் (24 மார்ச் 2020): காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்ய உத்தரவு. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஒமர்…

மேலும்...

வீட்டுக் காவலிலிருந்து முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா விடுதலை!

ஶ்ரீநகர் (13 மார்ச் 2020): வீட்டுக் காவலில் உள்ள முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டமான 370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர் ஸ்ரீநகரில் கடந்த 7 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பரூக்…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – ஈரான் அரசு எடுத்த அதிரடி முடிவு!

தெஹ்ரான் (10 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில் இருக்கும் சிறைக் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்த நிலையில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஈரான் நாட்டு அரசு சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஈரான் நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சுமார் 70 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு தலைமை…

மேலும்...