கார் விபத்தில் முன்னாள் அழகி உட்பட மூவர் பலி?

திருவனந்தபுரம் (13 நவ 2021): கேரள மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் முன்னாள் கேரள அழகி அன்சி கபீர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து டிரைவர் அப்துல் ரஹ்மான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விருந்து முடிந்ததும்அன்சி கபீர் சென்ற காரை வேறொரு கார் பிந்தொடர்ந்ததாகவும் இதில் வேகம் அதிகரித்து விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர் விபத்து தொடர்பான சில…

மேலும்...

புதுச்சேரியில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் தந்தை மகன் பலி!

புதுச்சேரி (05 நவ 2021): புதுச்சேரியில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் தந்தை மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். கலைநேசன் (37) என்பவர் வியாழக்கிழமை இரவு தனது மனைவி மற்றும் மகனுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் இரண்டு பெரிய பட்டாசு பைகளை வாங்கி. பைக்கில் கொண்டு சென்றுள்ளார். ஆனால் எதிர் பாராத விதமாக பட்டாசு பைக்கிலேயே வெடித்துச் சிதறியுள்ளது. இதில் கலைநேசனும், அவரது மகன் பிரதீஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தானர்….

மேலும்...

கோர விபத்து – திமுக எம்.எல்.ஏ.மகன் உட்பட 7 பேர் பலி!

பெங்களூரு (31 ஆக 2021): கர்நாடகாவில் ஏற்பட்ட கார் விபத்தில் ஓசூர் திமுக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நள்ளிரவில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த, சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் ஒருவர் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் என தெரிய வந்துள்ளது. இதுதவிர, கேரளாவை சேர்ந்த…

மேலும்...

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

மதுரை (28 ஆக 2021): மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. மதுரை நத்தம் சாலையில் சாலையில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இந்த விபத்தில் இரண்டு கட்டுமான பணியாளர்க்கிறாள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், விபத்தின் இடுபாடுகலில் இருவரை தவிர வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து…

மேலும்...

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் – யாஷிகா ஆனந்த் மற்றும் ஆண் நண்பர்களுக்கு தீவிர சிகிச்சை!

சென்னை (25 ஜூலை 2021): பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்த்தின் மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருடன் பயணித்த தோழி மரணம் அடைந்த…

மேலும்...

திருமணமாகி 10 நாட்களில் சோகம் – புது மண தம்பதிகள் சாலை விபத்தில் மரணம்!

கோழிக்கோடு (14 நவ 2020): திருமணமாகி பத்தே நாட்கள் ஆன புதுமணத் தம்பதிகள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சலாவுதீன் (25), அவரது மனைவி பாத்திமா ஜுமனா (19) ஆகிய இருவரும் புல்லட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கக்கஞ்சேரி ஸ்பின்னிங் மில் அருகே சென்று கொண்டிருந்தபோது, புல்லட்டின் மீது டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே சலாவுதீன் இறந்தார். பாத்திமா ஜுமனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்…

மேலும்...

ஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி!

கோதாவரி (29 அக் 2020): கிழக்கு கோதாவரி ஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பரிதாபமாக உயியிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், பூதேவிபேட்டாகிராமத்தை  சேர்ந்தவர்கள் வேலருபாடு மண்டலத்தில் வசந்தவாடா கிராமத்திற்குச் சென்று ‘வனபோஜனம்’ (காட்டில் விருந்து) கொண்டாட, தாசரா பண்டிகைக்குப் சென்று உள்ளனர். அப்போது கிழக்கு கோதாவரி ஆற்றில் 6 சிறுவர்கள் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். . நீரில் மூழ்கத் துவங்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை…

மேலும்...

அரசின் மெத்தனம் – புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தொடர் மரணம் – இன்றும் நேர்ந்த கொடூரம்!

லக்னோ (16 மே 2020): அரசின் மெத்தனத்தால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மரணம் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை எதுவும் எடுக்காமல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை தங்கள் மாநிலத்திற்கு அழைத்து செல்ல மத்திய அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறபோதும், கட்டணம் ஏழை…

மேலும்...

வீண் விளையாட்டு விபரீதமானது – நான்கு இளைஞர்கள் பரிதாப பலி!

ராணிப்பேட்டை (15 மார்ச் 2020): ராணிப்பேட்டை அருகே லோடு வேன் ஓட்டும் போது ரேஸ் போக நினைத்து வேன் கட்டுப்பாட்டை இழந்ததால் நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள ஆஜிப்பேட்டை பகுதியை சேர்ந்த 8 இளைஞர்கள் இரவு நேரத்தில் லோடு வேனில் விளையாட்டாக ரேஸ் செல்ல முயன்றுள்ளனர். அதிவேகமாக சென்ற மினி வேன் ஆஜிப்பேட்டை வலைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளனது….

மேலும்...

கர்நாடகம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பேர் விபத்தில் பலி!

கிருஷ்ணகிரி (06 மார்ச் 2020): கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோயிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பக்தர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10 பேர் காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயில் சென்றிருந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் அனைவரும் காரில் நள்ளிரவு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த கார் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது….

மேலும்...