கலங்கடித்த ஏழை மாணவி – கண் கலங்கிய நடிகர் சூர்யா (வீடியோ)

Share this News:

நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் மூலம் பயின்ற மாணவி அவரது வாழ்க்கை குறித்தும் பேசியபோது கண்கலங்கினார் நடிகர் சூர்யா.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நெய்வாசல் என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் காயத்ரி. ஏழை தொழிலாளியான அவரது அப்பா, தன் மகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக அகரம் ஃபவுண்டேஷனை நாடினார். இதற்கிடையே புற்று நோய் பாதிப்பால் காயத்ரியின் அப்பா இறந்துவிட, நிலைகுலைந்து போனது காயத்ரியின் குடும்பம்.

எனினும் அகரம் ஃபவுண்டேஷனின் உதவியுடன் கல்வியை முடித்து தற்போது கேரளாவில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிவதாக பெருமையுடன் கூறினார்.

அவரது அனுபவங்களை பகிர்ந்தபோது மேடையில் இருந்த நடிகர் சூர்யா கண்ணீர் விட்டு அழுதார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *