டிஜிட்டல் திருட்டுக்களை தவிர்க்க 12 எளிய வழிகள்!

Share this News:

ஏ.டி.எம் மூலம் நடைபெறும் திருட்டுக்களை தவிர்ப்பது எப்படி? 

–  அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் உள்ள ஏடிஎம்-களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக வங்கிக் கிளைகளுக்குள் இருக்கும் ஏடிஎம்களைத் தேர்ந்தெடுக்கவும்.

– ஏ.டி.எம் இல் பாஸ்வேர்டு உள்ளீடு செய்யும்போது பிறர் பார்க்காத வண்ணம் மறைக்கவும்.

– சந்தேகப்படும்படியான நபர்கள் ஏ.டி.எம் அறையில் தென்பட்டால், எச்சரிக்கை அவசியம்.

– ஏ.டி.எம் கார்டை செலுத்தும் இடத்தில் வித்தியாசமாக ஏதும் தென்பட்டால், அந்த ஏ.டி.எம்-ஐ தவிர்க்கவும். Skimming என்பது ஏ.டி.எம் இயந்திரத்தில் மாறுதல் செய்து திருடர்கள் பயன்படுத்தும் முறை. இதன்மூலம், உங்களின் ஏ.டி.எம் கார்டின் தகவல்களும், பாஸ்வேர்டும் திருடப்பட்டு விடும்.

ஆன்லைன் மூலம் நடைபெறும் திருட்டுக்களை தவிர்ப்பது எப்படி? 

–  ஆப் ஸ்டோர் அல்லது ப்ளே ஸ்டோர் தவிர்த்து வேறு எந்த ஒரு இணைய தளம் மூலமும் ஆப்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டாம்.

– தெரியாத QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதைத் தவிர்க்கவும்.

–  எஸ்.எம்.எஸ் அல்லது இமெயில் மூலம் வரும் லிங்க்-கை க்ளிக் செய்ய வேண்டாம்.

– உங்கள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டரை எப்போதும் அப்டேட் வெர்ஷனில் வைத்திருக்கவும்.

–  நீங்கள் க்ளிக் செய்த இணைய தள சுட்டி மூலம் பணம் அனுப்பும் முன் இணைய தள முகவரி சரியானது தானா என்று ஒன்றுக்கு இருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள்.

– பாதுகாப்பான, தனிப்பட்ட வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தவும். இலவச வைஃபை கிடைக்கிறதே என ஆசைப்பட்டு public hotspots ஐ பயன்படுத்த வேண்டாம்.

– உங்களின் யூஸர் நேம் / பாஸ்வேர்டு தகவலை யாரிடமும் பகிர வேண்டாம். குடும்ப உறுப்பினர் என்றாலும் கூட இமெயில் அல்லது வாட்ஸ் அப் மூலம் பகிர வேண்டாம்.

ஆன்லைன் மூலம் உங்கள் பணம் திருடப்பட்டு விட்டது என்பதை அறிந்தால் உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள். பல்வேறு வங்கிகள் 72 மணி நேரத்திற்குள் பதிவாகும் புகார்களுக்கான பணத்தைத் திரும்ப பெற்றுத் தருகின்றன.  வங்கியில் புகார் அளித்த கையுடன், உள்ளூர் சைபர் கிரைம் தடுப்புத் துறையை தொடர்பு கொள்ளுங்கள்.

  • இந்நேரம்.காம்

Share this News: