கூகுள் தொழில் நுட்பத்தில் கலக்கும் ஓமன் 360 விர்ச்சுவல் டூர்!

கூகுள் தொழில் நுட்பத்தில் கலக்கும் ஓமன் விர்ச்சுவல் டூர்!
Share this News:

மஸ்கட் (05 மார்ச் 2024): ஓமன் நாட்டின் அனைத்து சாலைகளையும், சுற்றுலா தளங்களையும் 360 டிகிரி விர்ச்சுவல் டூர் வியூவில் மேம்படுத்தி வருகிறது ஓமன் அமைச்சகம்.

ஓமன் நாட்டின் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (எம்.டி.சி.ஐ.டி.) மேற்பார்வையுடனும், ஓமனின் தேசிய ஆய்வு ஆணையம் மற்றும் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடனும் ஓமன் நாட்டின் அனைத்து சாலைகளையும் விர்ச்சுவல் வியூவில் அமைக்கும் அதிநவீன தொழில் நுட்பத்திற்கான திட்டத்தை கூகுள் செயல்படுத்தி வருகிறது.

இதற்கான பணிகள் ஏற்கனவே கடந்த பிப்ரவரி 2024 இல் தொடங்கப்பட்டு விட்டது. இப்பணி அடுத்த ஆண்டு 2025 நிறைவடையும்.

இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

முதல் கட்டத்தில் ஓமன் நாட்டின் முக்கிய நகரங்களான மஸ்கட், சோஹார் மற்றும் சலாலா ஆகியவை 360 டிகிரி விர்ச்சுவல் வியூ ஆகிறது. இரண்டாவது கட்டத்தில், ஓமனில் உள்ள மற்ற மாநிலங்கள் மேம்படுத்தப்படும்.

இந்த நவீன தொழில் நுட்பத்தில் ஓமன் நாட்டில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் நகரங்களை எவரும் 360 டிகிரி விர்ச்சுவல் டூர் இல் கண்டு மகிழ இயலும். (இந்நேரம்.காம்)

சர்வதேச சுற்றுலா பயணிகள் ஓமன் நாட்டுக்கு வருகை தருவதை இந்த திட்டம் பெருமளவில் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஓமன் நாட்டில் எந்த ஒரு பகுதியைப் பற்றியும் அறிய விரும்பும் ஒரு சுற்றுலா பயணி, அந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்னதாக விர்ச்சுவலாக பயணித்து கண்டு முடிவு செய்ய இயலும். அதன் மூலம் சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிட முடியும்.

மேலும், ஆய்வு மாணவர்கள் மற்றும்  புள்ளி விபர ஆய்வாளர்கள்,  அறைக்குள் இருந்தபடியே ஓமன் நாட்டின் எந்த ஒரு சுற்றுலா தலத்தையும் விர்ச்சுவல் விசிட் செய்து கற்றல், பொழுதுபோக்கு மற்றும் தகவல்களுக்கான சுற்றுலா இடங்கள் மற்றும் முக்கியமான இடங்களை ஆராயவும் அனுபவிக்கவும் முடியும்.

விருப்பமுள்ள பகுதிகள் எவை என ஒருவர் கண்டு உணர்ந்து ஆய்ந்து கொள்ள முடிவதால், இது பெருமளவு நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம் என ஓமன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)


Share this News: