அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரோனா தொற்று உறுதி!

Share this News:

சென்னை (16 ஜூலை 2020): தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கிரின்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் நிலோபர் கபிலின் மகன் மற்றும் மருமகனுக்கு தொற்று உறுதியான நிலையில் அமைச்சருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கொரோனா தொற்று காரணத்தால் அமைச்சர் நிலோபர் கபில், நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *