கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் எச்.விஜய் வசந்த் போட்டி?

Share this News:

சென்னை (05 மார்ச் 2021): கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட எச்.விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எச்.வசந்த்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்த்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தமிழகம் சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஏப்ரல்-6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

இதயைடுத்து, அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட எச்.வசந்த்குமார் மகன் விஜய் வசந்த் சென்னை சத்யமூர்த்திபவனில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

இதனைபோல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ராகுல்காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகனுமான கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *