சவூதியில் தனியார் துறையில் அதிகரிக்கும் சவூதி தொழிலாளர்கள் – வேலை இழக்கும் வெளிநாட்டினர்!

Share this News:

ரியாத் (05 நவ 2021): சவூதியில் தனியார் நிறுவனங்களில் சென்ற ஆண்டை விட அதிக அளவில் சவூதி தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

சவூதியில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் வகையிலும், பல முனைப்புகளை சவூதி அரசு செய்து வருகிறது.

அதன்படி கடந்த மூன்று மாதங்களில் அறுபதாயிரம் சவூதியர்கள் தனியார் துறை நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படுள்ளனர்.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் தனியார் துறையில் உள்நாட்டுமயமாக்கல் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சவூதியில் இந்த ஆண்டு சுமார் 60,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இரண்டு லட்சம் பேர் பயிற்சி முடித்துள்ளனர். மனித வள நிதியகமும் இவர்களுக்கு நிதி உதவி செய்கிறது.

பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் அமைச்சகம் உதவி புரிந்து வருகிறது. இதனால் வெளிநாட்டினர் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

சவுதி மக்களிடையே வேலையின்மை விகிதம் கடுமையாக குறையும் வரை தேசியமயமாக்கலை தொடர அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *