நெல்லை கண்ணன் மரணம்!

Share this News:

திருநெல்வேலி (18 ஆக 2022): பிரபல இலக்கிய பேச்சாளர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் (77) உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தார். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர்.

இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஆக.,18) காலமானார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *