சவூதி பாலைவனத்தில் திக்கற்ற நிலையில் சிக்கித்தவித்த 35 இந்தியர்கள் மீட்பு!

Share this News:

ரியாத் (26 டிச 2022): சவூதி அரேபியாவில் பாலைவனத்தில் திக்கற்ற நிலையில் பரிதாபமாக வாழ்ந்த 35 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.ன்

சமூக ஆர்வலர்களும், இந்திய தூதரகமும் இணைந்து முப்பத்தைந்து இந்தியர்களை மீட்க வழிவகை செய்தது.

மீட்கப்பட்டவர்களில் 31 பேர் சட்டப்பூர்வ நடைமுறைகளை முடித்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ள 3 பேர் விரைவில் இந்தியா அனுப்படவுள்ளனர். ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

35 பேரும் கத்தாரில் வேலை வாய்ப்பு விசாவில் கத்தாருக்கு வந்துள்ளனர். பின்னர் ஸ்பான்சர் சவுதிக்கு விசிட் விசாக்களை ஏற்பாடு செய்து, சவுதி அரேபியாவின் ருபுல்காலி பாலைவனத்தில் அவர்களை ஒட்டகங்களை மேய்க்க ஏற்பாடு செய்துள்ளார்.

அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம் மற்றும் சரியான தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் இல்லாமல் தனிமையில் சிக்கித் தவித்தனர். இதற்கிடையில், அவர்களில் சிலரின் உறவினர்கள் இந்திய தூதரகத்தில் புகார் அளித்ததையடுத்து வெளியுலகிற்கு தகவல் கிடைத்தது.

இந்திய தூதரக தன்னார்வலரும், KMCC சமூகத் துறையின் தலைவருமான சித்திக் துவ்வூர் முயற்சியில் சவூதி போலீசாரின் உதவியில் 35 பேரும் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் மீட்புப் பணிக்கான நடைமுறைகள் பல மாதங்கள் நீடித்தன.

பின்பு 35 பேரும் தனி மையங்களுக்கு மாற்றப்பட்டனர். இறுதியாக, 31 பேரின் செயல்முறை முடிக்கப்பட்டு அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். இதற்கிடையில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். மீதமுள்ள 3 பேரும் விரைவில் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று சித்திக் துவ்வூர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *