கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!

கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்! கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!
Share this News:

தோஹா (09, செப் 2025): கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.   உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ள கத்தார், இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

காஸா (பாலஸ்தீன்) மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்பேரழிவுக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்கான தொடர் முயற்சியில் கத்தார் நாடு ஈடுபட்டு வருகிறது.

 

இதில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கத்தாரில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உடன்பட மறுத்து வருகிறது.

இந் நிலையில், ஹமாஸ் தரப்பிலான பேச்சுவார்த்தை குழு தங்கியுள்ள ஹமாஸின் அலுவலகம் மீது கத்தார் நேரம் மதியம் 3 மணியளவில்  [12:00 GMT] இந்த வான் வழித் தாக்குதலை இஸ்ரேல் நிகழ்த்தியுள்ளது. (இந்நேரம்.காம்)

தோஹாவில் இருந்து நமது செய்தியாளர்: – நடந்தது என்ன?

♦  கத்தார் தலைநகர் தோஹாவில் (வான் வழி) விமானத் தாக்குதலை தாங்களே நடத்தியதாகவும், அது ஹமாஸ் அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டது என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


♦  கத்தார் வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை “குற்றத் தாக்குதல்” எனக் கண்டித்துள்ளது.


♦  அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நடத்தியுள்ள இந்த கொடூரத் தாக்குதல் மூலம் இஸ்ரேல் “அனைத்து சர்வதேச சட்டங்களையும் நெறிமுறைகளையும் வெளிப்படையாக மீறிவிட்டது” என்றும் கத்தார் தெரிவித்துள்ளது.


♦  கத்தார் மீதான இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் “முழு பொறுப்பையும் ஏற்கிறது” என்று கூறி,  அமெரிக்காவின் ஒத்துழைப்பு இன்றி தனியாகவே இஸ்ரேல் செயல்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.


♦  இஸ்ரேல் நடத்தியுள்ள இந்த தாக்குதல் “ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தை மட்டுமே குறி வைக்கப்பட்டது” என்றும் கத்தார் வாழ் மக்கள் இதனால் எவ்விதத்திலும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


♦  இந்த தாக்குதலில், ஹமாஸ் தரப்பில் யாரும் கொல்லப்பட வில்லை என ஹமாஸ் வட்டாரங்கள் அல் ஜஸீராவுக்கு தெரிவித்துள்ளன.


♦  கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக, ஐ.நா மற்றும் சவூதி அரேபியா, குவைத், ஓமான், துருக்கி, ஈராக், ஜோர்டான், ஐக்கிய அமீரகம், மாலத்தீவு, பாகிஸ்தான், பிரான்ஸ், பிரிட்டன், லெபனான், மொராக்கோ, சிரியா, அல்ஜீரியா உட்பட பல்வேறு நாடுகள் தமது கடும் கண்டங்களைத் தெரிவித்துள்ளன.


♦  ஹமாஸ் அலுவலகம் தாக்கப்பட்டதன் காரணமாக ஹமாஸ் தரப்பில் ஏதும் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் பாதுகாப்புக் காவலர்கள் ஐந்து பேர் உயிர் இழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. (இந்நேரம்.காம்)

தாக்குதல் நடந்த இடம்:

Interactive_Doha-Hamas_September9_2025


Share this News: