கைப்பந்து போட்டி நடத்தி கவனத்தை ஈர்த்த ரியாத் தமிழ்ச் சங்கம்!

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய கைப்பந்து போட்டி! ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய கைப்பந்து போட்டி!
Share this News:

ரியாத் (26 டிசம்பர் 2025): கடந்த 26 டிசம்பர் 2025, வெள்ளிக்கிழமை அன்று ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய கைப்பந்து போட்டி, ரியாத் அபெக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

கடந்த 20 ஆண்டுகளாக ரியாத் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைந்த அங்கமாகத் திகழும் ரியாத் தமிழ்ச் சங்கம், பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருடா வருடம் விளையாட்டுப் போட்டிகளும், மாணவர் கலைவிழாவும் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. (இந்நேரம்.காம்)

அதன் நீட்சியாக, இவ்வாண்டு மூன்றாவது முறையாக கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில்,  கீழ்க்கண்ட 12 அணிகள் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின:

  • Fury Falcons – A
  • Fury Falcons – Z
  • Phoenix Strikers
  • Rising Titans
  • RTG
  • Shasma
  • Shockerz
  • Sinpers-1
  • Snipers-2
  • Spartans Batha
  • Star Boys
  • SATSA

மேற்கண்ட 12 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இழைப் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஓர் அணி என்ற அளவில் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதிப் போட்டியில்

  • Spartans Batha Vs Shasma
  • Snipers 1 Vs SATSA

ஆகிய அணிகள் மோதியதில், Spartans Batha – Vs – Snipers 1 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

மிகவும் வலுவான போட்டியாக அமைந்த இறுதிப் போட்டியில், 3–2 என்ற set கணக்கில் Spartans Batha வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக spartans batha அணியை சேர்ந்த திரு. பிரசாத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

முழு நாள் நடந்தேறிய இந்த விளையாட்டுத் திருவிழாவில், கைப்பந்து போட்டி ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தில், துணை ஒருங்கிணைப்பாளர் திரு. கவிமணி, விளையாட்டுக்குழு தலைவர் திரு.சரவணன் ஆகியோர் சிறப்பாக ஏறபாடு செய்ய, ஏராளமான தமிழர்கள் குடும்பத்துடன் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு SPORTS CENTRAL மற்றும், DOSA CORNER நிறுவனங்கள் புரவலராக இருந்து உதவினர்.

  • இந்நேரம்.காம்

Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *