கேரளாவில் மீட்புப் பணியில் ராணுவம்!

திருவனந்தபுரம்(17 அக் 2021): கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனழையால் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில் மீட்புப்பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் மாநிலம் முழுவதும், குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய கேரள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கு தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக மாநிலத்தின் நெற்கிண்ணமாக அழைக்கப்படும் குட்டநாடு பிராந்தியம் வெள்ளத்தில் மிதக்கிறது. கொல்லம்,…

மேலும்...

இந்தியா இருளில் மூழ்கும் அபாயம்!

புதுடெல்லி (14 அக் 2021): இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறையால் மின் பற்றாக்குறை ஏற்பட்டு இந்தியா இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரிக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் பற்றாக்குறையால், மின் உற்பத்திக்கு நிலக்கரியைப் பெரிதும் நம்பியிருந்த பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை பல மடங்கு அதிகரித்ததுள்ளது. இதனால் சீனா உட்பட பல்வேறு நாடுகளிலும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சுமார் 60% மின்…

மேலும்...

உத்திர பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் பலி!

லக்னோ (04 அக் 2021): உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் பத்து மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்கிம்பூர் மாவட்டத்திலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலுள்ள பன்வீர்பூர்…

மேலும்...
Mamta-Banerjee

மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அபார வெற்றி!

கொல்கத்தா (03 அக் 2021): மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். தேர்தல் கமி‌ஷன் விதிகள்படி எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. பதவிகளில் இல்லாதவர்களும் முதல்வராக அல்லது அமைச்சராக பதவி ஏற்கலாம். ஆனால்…

மேலும்...

இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி!

புதுடெல்லி (02 அக் 2021): இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருபவர்களுக்கான பயண கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளர்த்தியது. ஆனால், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள நடைமுறைப்படி இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் இந்தியர்கள் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையில் கொரோனா…

மேலும்...

மதமாற்ற நாடகமாடிய பாஜக – சிக்கலில் போலீஸ்!

அலிகார் (30 செப் 2201): உத்தர பிரதேச மாநில அலிகார் நகரில், ஒரு முஸ்லீம் இளைஞர் இந்துவை மதம் மாற்றுவதாக விடியோ வெளியான நிலையில் அதன் உண்மை தன்மை அறியாமல் நடவடிக்கை எடுத்து உ.பி போலீஸ் சிக்கலில் சிக்கியுள்ளது. வைரலான இந்த வீடியோவை, பாஜகவினர் அலிகார் போஸிஸிடம் காண்பித்து புகார் அளிக்க. உடனே, செயல்பட்ட போலீஸ மதமாற்றம் செய்தவர் மீது மட்டுமின்றி… மதம் மாறியவர் மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாத கடுமையான சட்டப்படி இருவர் மீதும்…

மேலும்...

பாஜகவில் இணையும் பஞ்சாப் முன்னாள் முதல்வர்?

புதுடில்லி (29 செப் 2021): பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பமாக ,முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார். பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமரீந்தர் சிங்குக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து செப்.18-ல் அமரீந்தர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சரவையில் 18 பேர் அமைச்சர்கள் பொறுப்பேற்ற நிலையில் திடீர் திருப்பமாக, மாநில காங்.,…

மேலும்...

மோடிக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்!

வாஷிங்டன் (25 செப் 2021):  பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் உள்ள பூங்காவான லாஃபாயெட் சதுக்கத்தில் டஜன் கணக்கான இந்திய அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு தலைவர்களை சந்தித்து மோடி பேச்சுவர்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மோடிக்கு எதிராக அங்கு போராட்டமும் நடைபெற்றுள்ளது. “இந்தியாவை பாசிசத்திலிருந்து காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மனித உரிமை மீறல்கள்,…

மேலும்...

முஸ்லிம் மத அறிஞர் கைது – மதசார்பற்ற கட்சிகள் மவுனம்!

லக்னோ (23 செப் 2021): உத்திர பிரதேசத்தில் மதகுரு மவுலானா கலீம் சித்தகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதசார்பற்ற கட்சிகள் இவ்விவகாரத்தில் மவுனம் சாதிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவான அமனதுல்லா கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மவுலானா கலீம் சித்திகி வடக்கு உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மத தலைவராக பார்க்கப்படுபவர், இவர் நடத்தி வந்த ஜாமியா இமாம் வலியுல்லா எனும் அறக்கட்டளை இவரது தலைமையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இவர் பலரை கட்டாய மத மாற்றம் செய்ததாகக்…

மேலும்...

அபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி உரையாடல்!

புதுடெல்லி (03 செப் 2021): அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடிக்கொண்டனர். வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்த உரையாடலில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுகளைப் பற்றி தலைவர்கள் பேசினர் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதித்தனர். மேலும் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது….

மேலும்...