ஐக்கிய அரபு அமீரகம் மீது மீண்டும் தாக்குதல் முயற்சி!

துபாய் (31 ஜன 2022):ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹூத்தி படையினர் மீண்டும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது இரு வாரங்களுக்கு முன் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த வாரமும் அமீரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் முற்பட்டனர். எனினும் இதை அமீரக படையினர் இடையிலேயே…

மேலும்...

சவுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் உம்ராவுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பு!

ரியாத் (18 ஜன 2022): சவுதி அரேபியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உம்ரா யாத்ரீகர்களுக்கு மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இரண்டு உம்ராக்களுக்கும் இடையில் 10 நாட்களுக்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் 30 நாட்களில் மூன்று முறை மட்டுமே உம்ரா செய்யலாம். முன்னதாக, சவுதி அரேபியாவிற்குள் உள்ளவர்கள், உம்ராவை ஒருமுறை நிறைவேற்றிய 10 நாட்களுக்குப் பிறகு மட்டுமே இன்னொரு…

மேலும்...

அபுதாபி ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு இந்தியர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்!

அபுதாபி (18 ஜன 2022): அபுதாபி ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என மூவர் கொல்லப்பட்டனர். உலக நாடுகள் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தோடு…

மேலும்...

அபுதாபி மீது ட்ரோன் தாக்குதல் – 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி!

அபுதாபி (17 ஜன 2022): அபுதாபி விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் எரிபொருள் டேங்கர் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் இரண்டு இந்தியரும், ஒரு பாகிஸ்தானியரும் அடங்குவர். மேலும் ஆறு பேர் மிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தியதை ஏமனின் ஈரான் ஆதரவு ஹுத்திகள் ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்...

தோஹா சர்வதேச புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்!

தோஹா (13 ஜன 2022): 31வது தோஹா சர்வதேச புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது. தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது, மேலும் கோவிட் பரவலை அடுத்து மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 30 சதவீதத்தினர் மட்டுமே ஒரே நேரத்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்படும். தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் கடந்த ஒரு வருடத்தில் கோவிட் நோயிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே உள்ளே செல்லலாம். இந்த ஆண்டு, 37 நாடுகளில் இருந்து 430 பதிப்பாளர்கள் மற்றும் 90…

மேலும்...

இந்தியர்கள் இணையம் (ஆன்லைன்) மூலம் உம்ரா விசா பெற வாய்ப்பு!

இணையம் (ஆன்லைன்) மூலம் உம்ரா விசா பெற இந்தியர்களுக்கு அனுமதி! ரியாத் (11 ஜன 2022): சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இணையம் மூலம் (ஆன்லைனில்) உம்ரா விசா பெறுவதற்கான நடைமுறைகளை விளக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆன்லைனில் உம்ரா விசா பெறலாம். சவூதி அரேபியாவால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முழுமையாக பெற்ற 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உம்ரா விசா வழங்கப்படுகிறது. தற்போது சவூதி அரேபியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள இந்தியா…

மேலும்...

குழந்தைகளுக்கு பரசிடமால் மருந்து கொடுக்கும் முன்பு மருத்துவ ஆலோசனை அவசியம்!

ரியாத் (07 ஜன 2022): குழந்தைகளுக்கு பரசிடமால் மருந்து கொடுக்கும் முன்பு மருத்துவ ஆலோசனையைப் பெற்று கொடுக்க வேண்டும் என்று சவூதி உணவு மற்றும் மருந்து அமைப்பு எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான நோய்கள் மற்றும் அம்மை நோய் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், குழந்தைகளுக்கு பாராசிட்டமால் கொடுப்பதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுமாறு சவூதி உணவு மற்றும் மருந்து நிர்வாகம்,பெற்றோர்களை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கப்படும் பாரசிடமால் மருந்தின் அளவுகள் அவற்றின் எடை மற்றும் மருந்தின் செறிவுக்கு…

மேலும்...

சவூதி அரேபியாவில் மீண்டும் பரவும் கொரோனா – புதிய வழிமுறைகள் இன்று முதல் அமல்!

ரியாத் (30 டிச 2021): சவுதி அரேபியாவில் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் அனுமதி 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். கடைகள் மற்றும் வணிக வளாகங்களிலும் ஒன்றரை மீட்டர் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் (டிசம்பர் 30, 2021) இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும்  வணிக வளாகங்கள், பணியிடங்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். இவற்றை வாகனங்களிலும் அணிய வேண்டும். முகக்கவசம் அணியத் தவறினால் 1,000 ரியால் வரை…

மேலும்...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒட்டகப்பால் – அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்!

ரியாத் (20 டிச 2021): ஒட்டக இறைச்சியும், ஒட்டகப் பாலும் மருத்துவ குணம் நிறைந்தது என்றும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும், அமெரிக்க ஆராய்ச்சியாளர் கிறிஸ்டினா ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு ஒட்டகப் பால் கொடுக்கப் பட்டதாகவும், அதன் பலனை நன்கு உணர்ந்ததாகவும் தெரிவித்த கிறிஸ்டினா இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆட்டிசம் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ள கிறிஸ்டினா, ஒட்டகம் மற்றும் இறைச்சியின் நன்மைகள் கற்பனை செய்ய முடியாதவை என்று கண்டறிந்துள்ளார்….

மேலும்...

மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை!

மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம்! தோஹா (15 டிச 2021): கத்தாரில் மானிய விலை பொருட்களை விற்பனைக்கு உட்படுத்தினால் 5 லட்சம் ரியால் அபராதமும் 1 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படும். நேற்று முன் தினம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், மானிய விலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மானியம் வழங்கப்படும் பொருட்களை ஏற்றுமதி…

மேலும்...