வளைகுடா நாடுகளுக்காக துபாயில் நீட் தேர்வு மையம்!

துபாய் (24 ஜூலை 2021): வளைகுடா நாட்டு மாணவர்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குவைத்தில் நீட் தேர்வு மையம் உள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தை தவிர, பிற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக துபாயில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் வெள்ளிக்கிழமை முதல் துபாயில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . சவூதி…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு புதிய சிக்கல் – ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறை!

ரியாத் (22 ஜூலை 2021): சவுதியில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அதாவது கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து நிறுவனங்கள், கடைகள், மால்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சவூதியின் தவக்கல்னா அப்ளிகேஷனில் தடுப்பூசி பெற்ற அல்லது நோயெதிர்ப்பு சக்தியை பெற்றவர்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படலாம். அதேபோல இந்தியா உள்ளிட்ட நாடுகளில்…

மேலும்...

ஹஜ் 2021 – இன்று அரஃபா தினம்: பத்து மொழிகளில் அரஃபா உரை மொழிபெயர்ப்பு!

மக்கா (19 ஜுலை 2021): ஹஜ்ஜின் முக்கிய நிகழ்வான அரஃபா தினம் இன்று நடைபெறுகிறது. கோவிட் பரவலை அடுத்து நடைபெறும் இரண்டாவது ஹஜ்ஜில் இவ்வருடம் 60 ஆயிரம் ஹாஜிகள் பங்கு கொள்கின்றனர். கோவிட் கட்டுப்பாடுகளுடன், சுகாதரத்துறை முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் இன்று ஹஜ்ஜின் மிக முக்கியமான நிகழ்வான ‘அரஃபா கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக, யாத்ரீகர்கள் காலையிலிருந்து அராபாவுக்கு புறப்படுச்சென்றார்கள் . ஹஜ் யாத்ரீகர்கள் 3,000 பேருந்துகளில் அராபாவுக்கு பயணம் மேற்கொண்டனர். சவூதி அரசின் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் பேருந்துகள்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நேரங்கள் பட்டியல்!

துபாய் (18 ஜூலை 2021): வளைகுடா நாடுகளில் பக்ரீத் பெருநாள் வரும் ஜூலை 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூலை 20 ஆம் தேதி பக்ரீத் பெருநாள் தொழுகை எந்தெந்த பகுதிகளில் எப்போது நடைபெறும் என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முழு பட்டியல் : –அபுதாபி: காலை 6.02 -அல் ஐன்: காலை 5.56 -மதினத் சயீத்: காலை 6.07 -துபாய்: காலை 5.57 -ஷார்ஜா: காலை 5.54 –…

மேலும்...

புனித ஹஜ் கடமைகள் நாளை முதல் தொடக்கம் -ஹஜ் செய்யும் 200க்கும் அதிகமான இந்தியர்கள் – VIDEO

புனித ஹஜ் கடமைகள் நாளை முதல் தொடக்கம் -ஹஜ் செய்யும் 200க்கும் அதிகமான இந்தியர்கள் – VIEDO மக்கா (17 ஜூலை 2021): புனித ஹஜ் கடமை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. 2021 புனித ஹஜ் கடமை நாளை முதல் தொடங்குகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இவ்வருடமும் வெளிநாடுகளிலிருந்து ஹாஜிகள் யாருக்கும் அனுமதி இல்லை அதேவேளை சவூதியில் வசிக்கும் பல்வேறு நாட்டினர் 60 ஆயிரம் பேருக்கு மட்டும் ஹஜ் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி…

மேலும்...
Qatar tops In Corona Cure 1

குறைந்த சம்பளம் பெறுபவர்களுக்கு தனிமைப் படுத்தலில் சலுகை!

தோஹா (17 ஜூலை 2021): கத்தர் நாட்டிற்கு இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடாமல் வரும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு, தனிமை படுத்தலில் 14 நாட்களிலிருந்து 10 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளது. இந்த நடைமுறை, குறைந்த சம்பளம் பெறுபவர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப் படுகிறது. டிஸ்கவர் கத்தர்  என்கிற இணைய தளத்தில் இதுகுறித்த கூடுதல் தகவல்களையும் முன்பதிவினையும் மேற் கொள்ளலாம். (www.discoverqatar.qa) கத்தருக்கு வருபவர்கள் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி பெற்றிருந்தால் தனிமைப் படுத்தல் அவசியமில்லை…

மேலும்...

துபாய் – இந்தியா விமான சேவை தொடங்கப்படுமா? – எதிஹாத் ஏர்வேஸ் பதில்!

அபுதாபி (17 ஜூலை 2021): வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து விமான சேவை இல்லை என்று எதிஹாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட் பரவழைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத் தடை ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வந்தது. பின்னர் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் கோவிட் குறைந்து வருவதால் ஜூலை 21 க்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தடை நீடிக்கிறது….

மேலும்...

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதியில் அப்டேட் செய்வது குறித்த விளக்கம்!

புதுடெல்லி (16 ஜூலை 2021): இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி வரும்போது தவக்கல்னா அப்ளிகேஷனில் அப்டேட் செய்வது குறித்த சிறு விளக்கம். சவூதி அரேபியா அங்கீகரித்துள்ள கோவிட் 19 தடுப்பூசிகளில் கோவிஷீல்ட் (ஆஸ்டா ஜெனக்கா) தடுப்பூசியும் ஒன்று. இதனை போடுபவர்கள் முதல் டோசிற்கும், இரண்டாவது டோசிற்கும் இடையே 42 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதாக சவூதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் சிலர் இரண்டாவது டோசை 29 மற்றும் 31 நாட்களிலேயே பெற்றுள்ளனர். இவர்கள்…

மேலும்...

சவூதியில் கோவிட் (தவக்கல்னா) செயலியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது!

ரியாத் (16 ஜூலை 2021):கோவிட் குறித்து தனிநபர்களின் சுகாதார நிலையை தெளிவுபடுத்துவது குறித்த தவக்கல்னா செயலியில் முறைகேட்டில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டின 122 பேரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர் சவூதியில் தனி நபர் குறித்த அனைத்து நடைமுறைகளும் தவக்கல்னா என்ற செயலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதில் கோவிட் 19 குறித்த தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இநிலையில் இந்த செயலியில் பணம் பெற்றுக்கொண்டு தனி நபர் சுகாதார நிலையை மாற்றம் செய்து சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது…

மேலும்...

சவூதி சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவு!

தம்மாம் (15 ஜூலை 2021): சவூதி சிறையில் உள்ள 100 க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான தம்மம், கதிஃப் மற்றும் அல் கோபர் சிறைகளில் பல குற்ற வழக்குகளில் அடைக்கப்பட்டுள்ள 100 க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அடைப்படையில் இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பலரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை, எனவே சிறையில் உள்ளவர்களின் தங்கள் தகவல்களை சேகரித்து தூதரகத்தில் சமர்ப்பித்து…

மேலும்...