ஐக்கிய அரபு அமீரகம் – இந்தியா பயணத் தடை மேலும் நீட்டிப்பு!

துபாய் (30 மே 2021): இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்காண பயண தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது . இது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட பயண முகவர் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலையை தொடர்ந்து ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்தது. இந்நிலையில் இந்தியாவில் கோவிட் விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வருவதால் ஐக்கிய அரபு அமீரகம் தனது…

மேலும்...

இந்தியாவிற்கு விடுமுறையில் சென்றவர்களுக்கு சவூதி இந்திய தூதரகத்தின் முக்கிய தகவல்!

ரியாத் (26 மே 2021): சவுதியிலிருந்து விடுமுறையில் சென்ற இந்தியர்கள் இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணுக்கு பதிலாக பாஸ்போர்ட் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்குமாறு சவூதி இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதர் டாக்டர். அவுசஃப் சயீத் கூறுகையில், இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்கும் நிலை உள்ள நிலையில் அதற்கு பதிலாக பதிவு செய்ய பாஸ்போர்ட் எண்ணை வழங்குவதன் மூலம், சவுதி அரேபியாவுக்கு வருவதற்கான தொழில்நுட்ப சிக்கல்கள் தவிர்க்கப்படும். என்றார்…

மேலும்...

2021 ஆம் ஆண்டு ஹஜ் செய்ய வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதி!

ஜித்தா (21 மே 2021): உடல்நலம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அல்-வதன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு வெளிநாட்டு யாத்ரீகர்கள் யாரும் மக்காவிற்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக 2.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவில் ஹஜ்ஜிற்காக கூடுவர். ஆனால் கடந்த ஆண்டு 1000 உள்ளூர் யாத்ரீகர்கள் மட்டுமே சென்ற ஆண்டு…

மேலும்...

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் காசாவில் 52 குழந்தைகள் உட்பட 181 பேர் பலி!

காசா (16 மே 2021):காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 52 குழந்தைகள் உட்பட குறைந்தது 181 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ தகவல்களின்படி, நகரவாசிகளிடையே காயங்களின் எண்ணிக்கையும் 1,225 ஆக உயர்ந்தது. பாலஸ்தீன் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. டஜன் கணக்கான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்னர். இதுவரை 1,225 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இஸ்ரேலிய போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காசா நகரத்தின்…

மேலும்...

கொரோனா விவகாரம் – சவூதியில் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்!

ரியாத் (15 மே 2021): சவூதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் COVID-19 தடுப்பூசி போட வேண்டும் அல்லது வாராந்திர பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவை சவூதி அதிகாரிகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் அறிமுகப்படுத்திய இந்த நடவடிக்கைகளின்படி, முடிதிருத்தும் கடைகள் மற்றும் பெண்களின் அழகு நிலையங்களில் பணிபுரிபவர்கள், உணவகங்கள், கஃபேக்கள், உணவு விற்பனை நிலையங்களில் உள்ள அனைவரும் கொரோன தடுப்பூசி செலுத்தியவர்களாக இருக்க வேண்டும் இல்லையேல்…

மேலும்...

சவூதியில் பணிபுரியும் அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்!

ரியாத் (08 மே 2021): சவூதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாகும் என சவூதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (HRSD) அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் ஒருபகுதியாகவும், அனைவருக்கும் ஆரோகியமான வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் சவூதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்கள் பணியிடங்களுக்கு செல்வதெனில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியமாகும்.. இதனை நடைமுறைப்படுத்தும் நடைமுறை மற்றும் தேதியை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

சவுதியில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!

ஜித்தா (03 ஏப் 2021): சவுதி அரேபியா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், எஸ் டி பி ஜ மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக சவுதி அரேபியா ஒருங்கினைப்பாளர் பொறியியாளர் VKMM காஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது. இந்தியன் சோசியல் ஃபோரம் ஜெத்தா மாகான தலைவர் பொறியியாளர் அல் அமான் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார். இந்தியன் சோசியல் ஃபோரம் சவூதி அரேபியா ஒருங்கினைப்பாளர் அஷ்ரப் முறையூர்,…

மேலும்...

பாலஸ்தீன் காஸாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு!

காஸா (31 மார்ச் 2021): காஸாவில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு இது அதிக அளவிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்படுத்தப்பட்ட கடலோர பாலஸ்தீனிய “காசா பகுதியில் இது அதிகமாக உள்ளதாக காசா சுகாதார அமைச்சகத்தின் பராமரிப்பு துணை இயக்குனர் மேகி தாஹிர் கூறினார் காசாவில், 65,500 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும்…

மேலும்...

புனித ரமலானில் மக்கா மற்றும் மதினா பெரிய மசூதிகளில் விதிக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள்!

ஜித்தா (29 மார்ச் 2021): உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தொடர்வதால் இவ்வருட ரமலானில் புனித மக்கா மற்றும் மதினாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இரண்டு புனித மசூதிகளின் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதாய்ஸ் ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இப்தார் (நோன்பு திறப்புக்காக) விரிப்பு விரித்து ஒன்றாக நோன்பு திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. , இஃதிகாஃப் (வழிபாட்டுக்காக ஒரு மசூதியில் தங்கியிருக்கும் நடைமுறை) இரு மசூதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு…

மேலும்...

கோடைக்கால விடுமுறை – கத்தார் கல்வி அமைச்சகம் எச்சரிக்கை!

தோஹா (05 மார்ச் 2021): கத்தார் நாட்டில் பள்ளி ஆசிரியர்கள் குறுகியகால கோடை விடுமுறையில் விமான பயணம் மேற் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்குப் பிறகு மார்ச் 13 முதல் மார்ச் 18 வரை விடுப்பு கிடைக்கும். கோவிட் கால சூழலாக இருப்பதால் குறுகிய விடுப்பில் விமான பயணம் மேற்கொண்டால் சரியான நேரத்தில் கத்தாதிரும்புவது கடினம் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 21 முதல் கோவிட் தடுப்பூசி போடாத ஊழியர்களை…

மேலும்...