கடிதத்திற்கு தேச துரோக வழக்கா? – அடூர் கோபால கிருஷ்ணன் கொதிப்பு!
திருவனந்தபுரம் (04 அக் 2019): பிரமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு பதிவதா? என்று கேரள இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார். இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரா குஹா, அபர்னா சென், உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில் “ மேற்குவங்கம், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மை இன இளைஞர்களை ‘ஜெய்ஸ்ரீராம்’ என கோஷமிடச் சொல்லித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் இந்துமத அடிப்படைவாத அமைப்புகளே ஈடுபடுகின்றன…