முருகன் கோவிலுக்கு மின்தூக்கி வசதி – சட்டசபையை ஈர்த்த ஜவாஹிருல்லாவின் கோரிக்கை!

சென்னை (12 ஏப் 2022): சுவாமிமலை முருகன் கோவிலுக்காக இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குரல் கொடுத்து கோரிக்கை வைத்த நிகழ்வு சட்டசபையில் இருந்த மற்ற உறுப்பினர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, முருகனின் ஆறுபடை வீடுகளில் 4ஆம் படை வீடான சுவாமிமலை…

மேலும்...

மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க பள்ளி ஆசிரியர்கள் தடை – தமிழகத்திலுமா இப்படி?

கிருஷ்ணகிரி (08 ஏப் 2022): மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க ஆசிரியர்கள் தடை விதித்ததால் பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கொரல்தந்தம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்தநிலையில் ரமலான் நோன்பு தற்போது கடைபிடிக்கப் பட்டு வருவதால் மாணவர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இதற்கு தடை விதித்த பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி, நோன்பு இருப்பதை தவிர்க்க கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்…

மேலும்...

மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர் – நீதிமன்றத்தில் மனு!

சென்னை (08 ஏப் 2022): பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்ததை, நான்கு வழக்குகளிலும் தனித்தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக…

மேலும்...

நள்ளிரவில் பாஜக தலைவர் கைது!

சென்னை (08 ஏப் 2022): நள்ளிரவில் பாஜக மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழியில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற பாரதிய ஜனதா நிறுவப்பட்ட தின விழாவில் கட்சியின் மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் பேசினார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் அளித்த புகாரில் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு இரண்டரை மணியளவில் ஜெயப்பிரகாஷை கைது செய்ய இரணியலில் உள்ள அவரது…

மேலும்...

ஆளுநர் திமுக மோதல் – ஆளுநர் திடீர் டெல்லி பயணம்!

சென்னை (07 ஏப் 2022): தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் ஆளுநர் ரவி முன் நிலுவையில் உள்ளன. இதை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி மக்களவையில் `தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க வேண்டும்’ என்று திமுக-வினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார்…

மேலும்...

சொத்து வரியை உயர்த்தியது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

சென்னை (06 ஏப் 2022): சொத்துவரியை உயர்த்தியது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் தேக்க நிலையை அடைந்திருந்ததது. மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பற்றாக்குறையால் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றக்கூட சிரமம் ஏற்பட்டது. ஆனால் இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுத்து அரசிடம் நிதியை எதிர்பார்ப்பார்கள். சொத்துவரி உயர்வை மனம் உவந்து செய்யவில்லை. ஏழை-எளிய,…

மேலும்...

எடப்பாடி புலம்பல் – தங்கம் தென்னரசு பதில்!

புதுடெல்லி (02 ஏப் 2022): துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள்கள் பயணமாக டெல்லி கிளம்பிச் சென்றார். ஏப்ரல் 2ஆம் தேதி இன்று திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடி , ஒன்றிய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என பலருக்கும் கொடுத்து விழாவுக்கு வரவேற்றுள்ளார். முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்து பேசியது போல் டெல்லி பயணத்தையும்…

மேலும்...

சீமான் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

சென்னை (02 ஏப் 2022): திருவெற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவெற்றியூரில் அண்ணாமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிப்பதை கண்டித்து பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு சென்றார். பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது சீமான் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சீமான் அனுப்பி வைக்கபட்டார்….

மேலும்...

திமுகவை எதிர்த்து போராட காங்கிரஸ் முடிவு!

ஸ்ரீபெரும்புதுார் (01 ஏப் 2022): பேரூராட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத திமுகவை எதிர்த்து காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு போராட திட்டமிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,- – ஆறு; சுயேச்சை – நான்கு; அ.தி.மு.க.,- – மூன்று; பா.ம.க.,- மற்றும் காங்.,- தலா ஓரிடம் வென்றன.தி.மு.க., தலைமை கழகம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவர் பதவியை, காங்.,குக்கு ஒதுக்கியது. கடந்த 2ம் தேதி நடந்த தலைவர் தேர்தலில் தி.மு.க., உத்தரவை மீறி, தி.மு.க.,வைச்…

மேலும்...

இன்று உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை!

சென்னை (31 மார்ச் 2022): சென்னையில் இன்று (மார்ச் 31) பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 107 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்த நிலையில், கடந்த 22ம் தேதியில் இருந்து விலை உயரத்தொடங்கியது. ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு விலையேற்றம் காணாமல் இருந்த பெட்ரோல் விலை தேர்தல் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடி உள்ளது. சென்னையில்…

மேலும்...