அதை விட்டுவிட்டு இதற்கு ஏன்? – அண்ணாமலையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சென்னை (22 மார்ச் 2022): தமிழக பட்ஜெட் தொடர்பாக போராட்டம் நடத்தப்போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81க்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை திடீரென உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு…

மேலும்...

எனக்கு எதுவுமே தெரியாது – ஜெயலலிதா குறித்து ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை (21 மார்ச் 2022): ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் சொந்த ஊரில் இருந்த போது தெரிந்து கொண்டேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதை தவிர வேறு எந்த உடல் உபாதைகள் உள்ளது என்று எனக்கு தெரியாது. அவருக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த…

மேலும்...
Durai Murugan

தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு!

சென்னை (21 மார்ச் 2022): மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது குறித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகா மட்டுமல்லாது தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. கோடிக்கணக்கான மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ராம்நகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட…

மேலும்...

பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுனருடன் திடீர் சந்திப்பு!

சென்னை (21 மார்ச் 2022): தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார். கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில், இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை…

மேலும்...

வங்கக்கடலில் இன்று உருவாகும் அசானி புயல்!

சென்னை (21 மார்ச் 2022): தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து இன்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது. அசானி புயலால் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்,…

மேலும்...

தீயணைக்கும் பணிகளில் பெண்கள் – தமிழக அரசுக்கு பரிந்துரை!

சென்னை )20 மார்ச் 2022): தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் விரைவில் தீயணைப்பு வீராங்கனைகள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான பரிந்துரை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு இது குறித்து விரைவில் முடிவு எடுக்கும் என்று தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் பிரஜ்கிஷோர் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “எங்களிடம் அதிகாரி பிரிவில் 22 பெண்கள் உள்ளனர். ஆனால் தீயணைப்பு பணியாளர்களுக்கான பெண்கள் எங்களிடம் இல்லை. தீயை அணைக்கும் பணியில் பெண்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அரசின்…

மேலும்...

இங்கெல்லாம் இது இல்லையாம்!

கரூர் (18 மார்ச் 2022): கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் குணமடைந்து உள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாறியுள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டமும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. இங்கு கரந்த…

மேலும்...

ஹிஜாப் தடை – நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரியில் போராட்டம்!

சென்னை (16 மார்ச் 2022): ஹிஜாப் தடை குறித்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உத்தரவை எதிர்த்து கோசங்களை எழுப்பினர். இதனால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டது.

மேலும்...

கல்லூரி மாணவி தற்கொலை – பேராசிரியர்கள் கைது!

தென்காசி (13 மார்ச் 2022): தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து பிரியா என்ற மாணவி, அங்குள்ள மனோ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். செய்யாத தவறுக்காக மன்னிப்புக் கடிதம் தர வேண்டுமென பேராசிரியர்கள் அவரை நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த இந்து பிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, மாணவர்கள், உறவினர்கள்…

மேலும்...

ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (12 மார்ச் 2022): உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு ஒன்றிய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி குழுவினரை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் வரவேற்றார். இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய அரசுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும்…

மேலும்...