ஒன்றிய அரசு நிராகரித்த ஊர்திகள் சென்னையில் அணிவகுப்பு!

சென்னை (26 ஜன 2022): 73-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன கவர்னர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து டெல்லி அணிவகுப்பிற்கு உருவாக்கப்பட்டு ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார்,…

மேலும்...

அதிமுக பாஜக இடையே பிளவு – பாஜக மீது பாய்ந்த அதிமுகவினர்!

சென்னை (26 ஜன 2022): அதிமுகவிற்கு ஆண்மை என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜனதா சட்டசபை தலைவரும், திருநெல்வேலி எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

மேலும்...

மிஸ்வா அறக்கட்டளை சார்பாக குடியரசு தின தேசிய கொடியேற்ற நிகழ்வு

மேலக்காவேரி (26 ஜன 2022): 73 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு மேலக்காவேரி மிஸ்வா அறக்கட்டளை சார்பாக மிஸ்வா மனிதம் கிளினிக் வளாகத்தில் தேசிய கொடியேற்ற நிகழ்வு, தொழிலதிபர் ஹோட்டல் பிரஸிடெண்ட் குழுமம் பஷீர் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சுதந்திர போராட்ட வீரர் மறைந்த தியாகி மேலக்காவேரி அப்துல் வகாப் அவர்களின் பேரன் ஜனாப் ஜவஹர் அலி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மிஸ்வா தலைவர் மு.அப்துல் அஜிஸ்…

மேலும்...

அரியலூர் மாணவி தற்கொலை – பெற்றோரிடம் ரகசிய வாக்குமூலம்!

தஞ்சாவூர் (24 ஜன 2022): அரியலூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி தஞ்சையில் தனியார் பள்ளி விடுதியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது பெற்றோர் தஞ்சை நீதித்துறை நடுவர் முன் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர். மாணவியின் தற்கொலைக்கு மதம் மாற கட்டாயப்படுத்தியதே காரணம் என எழுந்த குற்றச்சாட்டை காவல்துறையினர் ஏற்கனவே மறுத்திருந்தனர். இந்நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மாணவியின் உடலை…

மேலும்...

தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவு!

மதுரை (22 ஜன 2022): தஞ்சாவூர் அருகே தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி அருகே உள்ள…

மேலும்...

ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவசாசன் ஆதரவு

சென்னை (20 ஜன 2022): அலங்கார ஊர்தி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வலம் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளை நிராகரிப்பு விவகாரத்தில் திமுக அரசு அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் அவர் கூறியுள்ளார். மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களான கப்பலோட்டிய தமிழர் வஉசி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்று கூறி மத்திய அரசு…

மேலும்...

சென்னையில் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி!

சென்னை (19 ஜன 2022): சென்னை தி.நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வருகிறது பிரைம் சரவணா ஸ்டோர். இந்நிறுவனம், இந்தியன் வங்கிக்கு செலுத்தவேண்டிய ரூ.120 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், கடனை திருப்பி செலுத்தாததால் சென்னை தி.நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி ஜப்தி செய்துள்ளது. ரங்கநாதன் தெருவிலுள்ள கடை மற்றும் உஸ்மான்…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினிடம் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் திடீர் கோரிக்கை!

சென்னை (17 ஜன 2022): சென்ற ஆண்டைப்போல இந்த வருடமும் 12ஆம் வகுப்புத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாணவர்கள் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர். 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவுக்கு தற்போது வரை முடிவு காலம் வரவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு கல்வி முறையில் பெரும் மாற்றங்கள் நடந்துள்ளன. கடந்த இரண்டு வருடத்தில்…

மேலும்...

10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதிவரை பள்ளி விடுமுறை!

சென்னை (16 ஜன 2022): கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதிவரை பள்ளி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல்9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும்…

மேலும்...

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன? – முப்படைகள் நீதிமன்றம் அறிக்கை!

புதுடெல்லி (14 ஜன 2022): குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து, IAF ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தும் முப்படைகள் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் முதல் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி தமிழகத்தின் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். “பள்ளத்தாக்கில் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றம் காரணமாக மேகங்களுக்குள் நுழைந்ததன் விளைவாக விபத்து ஏற்பட்டது. இது…

மேலும்...