தமிழகத்தில் நவம்பர் 13ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை(1 நவ 2021): தமிழகத்தில் நவம்பர்,13ல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்கனவே ஒன்று உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (நவ.11) கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்க்கும் என ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை (09 நவ 2021): கனமழையை அடுத்து கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 16 கடலோர மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று இரவு சென்னை வருகிறார்கள். சென்னையில் மழை குறைந்தாலும் வெள்ளம் தொடர்கிறது வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை…

மேலும்...

மகளிர் லீக்கின் (முஸ்லிம் லீக்)தேசிய தலைவராக பாத்திமா முசாபர் தேர்வு!

சென்னை (05 நவ 2021): மகளிர் லீக்கின் தேசிய தலைவராக பாத்திமா முசாபர் (தமிழ்நாடு) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் லீக்கின் தேசிய ஆலோசனைக் குழு மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சட்டப் பட்டம் மற்றும் இஸ்லாமியப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற பாத்திமா முசாஃபர் சிறந்த பேச்சாளர் மற்றும் அமைப்பாளர். முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், தமிழ்நாடு வக்பு வாரியம், முஸ்லீம் மகளிர் உதவி சங்கம், முஸ்லிம் பெண்கள் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்….

மேலும்...

புதுச்சேரியில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் தந்தை மகன் பலி!

புதுச்சேரி (05 நவ 2021): புதுச்சேரியில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் தந்தை மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். கலைநேசன் (37) என்பவர் வியாழக்கிழமை இரவு தனது மனைவி மற்றும் மகனுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் இரண்டு பெரிய பட்டாசு பைகளை வாங்கி. பைக்கில் கொண்டு சென்றுள்ளார். ஆனால் எதிர் பாராத விதமாக பட்டாசு பைக்கிலேயே வெடித்துச் சிதறியுள்ளது. இதில் கலைநேசனும், அவரது மகன் பிரதீஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தானர்….

மேலும்...

நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் – விமான நிலையத்தில் பரபரப்பு -(வீடியோ இணைப்பு)

பெங்களூரு (03 நவ 2021): நடிகர் விஜய் சேதுபதி மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படபிடிப்பிற்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்திருந்த மர்ம நபர் ஆவேசத்துடன் விஜய் சேதுபதி மீது பாய்ந்து பின்னால் முதுகில் எட்டி உதைத்தார். இதில் விஜய் சேதுபதி நிலை தடுமாறினார். இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. உடன் பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவரை காப்பாற்றினர்…

மேலும்...

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை:(01நவ2021):வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் எம்.பி.சி., பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் அ.தி.மு.க., முதல்வராக பழனிசாமி இருந்தபோது சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து தி.மு.க., அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது. இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும்,…

மேலும்...

ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்!

சென்னை (31 அக் 2021): நடிகர் ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். திடீர் உடல்நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்தார். ரஜினி…

மேலும்...

ஜவாஹிருல்லா, அப்துல் சமது மமகவில் தொடரக்கூடாது – நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை (28 அக் 2021): மமக எம்.எல்.ஏக்களான ஜவாஹிருல்லா, அப்துல் சமது மமகவில் தொடரக்கூடாது என்ற மனு மீது விசாரனையில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த அப்துல்ஹக்கீம், சென்னை சிட்டி சிவில் 15வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா 61, பொதுச்செயலாளர் அப்துல்சமது 52 ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் முறையே பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் தி.மு.க.,சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். மனித…

மேலும்...

வசமாக சிக்கிக் கொண்ட அண்ணாமலை – பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு மழுப்பல் பதில்!

சென்னை (27 அக் 2021): வாயை கொடுத்து பெறும் நிறுவனத்திடம் வசமாக சிக்கிக் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டுமே என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பி.ஜி.ஆர். எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு தமிழக மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை செய்துள்ளதாக சில ஆவணங்களை பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்…

மேலும்...

பட்டாசுக்கடையில் திடீர் தீ – 4 பேர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி (26 அக் 2021): கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சிக்கி…

மேலும்...