பாஜக கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு!

சென்னை (26 அக் 2021): சமூக வலைத்தளங்களில் அருவருக்கத் தக்கவகையில் எழுதிவரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாகப் பேசிய புகாரின் பேரில் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் இது இப்படியிருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் குறித்து பாஜக பிரமுகரான கல்யாணராமன்…

மேலும்...

மாணவர்கள் பழைய பாஸை பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி!

சென்னை (25 அக் 2021): மாணவர்கள் பழைய பாஸை பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்கள் பழைய அடையாள அட்டையைக் காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அது இல்லையென்றால் பள்ளிச்சீருடை , பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

மேலும்...

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (21 அக் 2021): முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் பிரச்னை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மதியமே அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

மேலும்...

சீமான் கட்சிக்குள் ஆர் எஸ் எஸ் – பகீர் கிளப்பும் சீமானின் நண்பர்!

சென்னை ,(19 அக் 2021):நாம் தமிழர் கட்சிக்குள் ஆர் எஸ் எஸ் நுழைந்துள்ளதாக இயக்குனரும் சீமானின் நெருங்கிய நண்பரான அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏ.பி.பி.நாடு ஊடகத்துக்கு இயக்குநர் அமீர் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் பாஜகவின் பி டீம் என்கின்றனர். யார்தான் யாருக்கு பி டீம் என்பது தெரியவில்லை. பொதுவாக பாஜக, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினர் பெரியாரை நிராகரிக்கின்றனர்; திராவிட எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவை டார்கெட் செய்கின்றனர். இந்த விஷயங்களை…

மேலும்...

அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!

புதுடில்லி (14 அக் 2021):பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசி அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ‘கோவிஷீல்டு கோவாக்சின்’ தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 96.43 கோடி தடுப்பூசி ‘டோஸ்’கள் செலுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே ‘சைடஸ் கேடிலா’ என்ற நிறுவனம் 12 – 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்காக ஊசியில்லா தடுப்பு மருந்தை தயாரித்துஉள்ளது. இதை அவசர காலத்தில் பயன்படுத்த…

மேலும்...

தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு விழுந்த வாக்குகளால் அதிர்ச்சி

கோவை (12 அக் 2021): தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகிவருகின்றன. இந்நிலையில் கோவையில் நடைபெற்ற ஒரு வார்டின் இடை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு 1 வாக்குகள் மட்டுமே கிடைத்து படு தோல்வி அடைந்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் திமுக 20 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வென்றுள்ளன. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன

மேலும்...

சாட்டை துரை முருகன் நாதகவிலிருந்து நீக்கம்!

சென்னை(11 செப் 2021): நாம் தமிழர் கட்சியிலிருந்து சாட்டை துரை முருகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசியதான குற்றச்சாட்ட்டின்பேரில் சாட்டை துரை முருகன் கைதாகியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் துரை முருகனை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...

பள்ளிகளில் குழந்தைகளுடன் அமர பெற்றோருக்கும் அனுமதி!

திருச்சி(09 அக் 2021) : ”ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன், வகுப்பறையில் பெற்றோர் அமர அனுமதி அளிக்கப்படும்,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நேற்று முன்தினம் இரவு, உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மகேஷ் தெரிவிக்கையில், “நவம்பர்1 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கு வரும் மாணவ – மாணவியரின் பெற்றோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, கூடுதல் கவனத்துடன் விழிப்புணர்வு…

மேலும்...
Durai Murugan

அமைச்சர் துரை முருகனுக்கு எதிராக பஸ் ஊழியர்கள் போராட்டம்!

தஞ்சாவூர் (02 அக் 2021):மூத்த அமைச்சரான துரைமுருகன், வேலுார் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்துள்ளோம். பெண்கள் பஸ்சில் ஏறியதும், அப்படிப் போய் உட்காரு என கண்டக்டர்கள் கூறுகின்றனர். ‘அப்படிப்பட்டவர்களை, பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும். அரசு பஸ் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா… பெண்களை தரக்குறைவாக நடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை வேலையை விட்டு அனுப்பி விடுவோம்’…

மேலும்...

சதமடிக்கும் பெட்ரோல் விலை!

சென்னை (01 அக் 2021): பெட்ரோல் விலை அக்டோபர் 1 முதல் மீண்டும் விலை உயர்க்கிறது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 99.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.74 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. நேற்று சென்னையில்…

மேலும்...