பாஜக தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (22 ஆக 2021): மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இல.கணேசன் பாஜகவின் தேசியக்குழு உறுப்பினராக உள்ளார். தஞ்சையை சேர்ந்த இல கணேசன் (வயது 78) தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு…

மேலும்...

பதறும் எடப்பாடி பழனிச்சாமி – வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

சென்னை (18 ஆக 2021): கொடநாடு கொலை வழக்கில் தன்னை சிக்க வைக்க முயல்வதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கொடநாடு எஸ்டேட்டில் உள்ள இல்லத்துக்கு ஜெயலலிதா சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். அந்த இல்லத்தில் கொள்ளை கும்பலை சேர்ந்த சயன் மற்றும் கூட்டாளிகள் கொள்ளையடிக்க முயற்சித்த போது காவலாளி மரணம் அடைந்தார். இந்த…

மேலும்...

புது மாப்பிள்ளை ஷமில் அஹமது முகத்தில் ஆசிட் வீச்சு – ஆம்பூரில் பரபரப்பு!

ஆம்பூர் (18 ஆக 2021): திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புது மாப்பிள்ளை ஷமில் அஹமத் முகத்தில் ஆசிட் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்பூர் ஆயிஷா-பி நகர் பகுதியில் காலணி தொழிற்சாலை உள்ளது. இதில் தொழிலாளியாக பணியாற்றுபவ ஷமில் அஹமத். ஆகஸ்ட் 21ஆம் தேதி ஷமில் அஹமதுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு கம்பெனிக்கு வெளியே இவர் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியத்தில் ஷமில் முகம் பாதிக்கப்பட்டுள்ளது. வலியால் துடித்தவரை சக ஊழியர்கள்…

மேலும்...

இந்திய அளவில் சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் தேர்வு!

சென்னை (17 ஆக 2021): தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் சிறந்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா டுடேயின் ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கணக்கெடுப்பின்படி, சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு 42 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. ஒடிசாவின் நவீன் பட்நாயக் இரண்டாது இடத்தில் உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நவீன் பட்நாயக்கிற்கு 38 சதவீத ஆதரவும், பினராயி விஜயனுக்கு 35 சதவீத ஆதரவும் கிடைத்தன….

மேலும்...

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 2 ஆயிரம் கோடி முறைகேடு – உரிய விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (17 ஆக 2021): தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முறைகேடாக தனிநபர்களுக்கு விற்பனை செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தக் கோரிய மனு மீது விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

மேலும்...

பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை (17 ஆக 2021): பிரபல தொலைகாட்சி தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் நேற்று இரவு காலமானார். சன் மியூசிக்கில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன்.வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளராக இருந்த இவர் 90ஸ் கிட்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர். நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். சித்துபாத் உள்ளிட்ட சீரீயலில் நடித்த ஆனந்த கண்ணன் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு…

மேலும்...

இந்துத்வாவினருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது – அமைச்சர் சேகர்பாபு!

சென்னை (17 ஆக 2021): இந்துசமய அறநிலையத்துறையைப் பொறுத்தவரையில் இந்துத்வாவினருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் குறித்து தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்பொழுது பேசிய அவர், ”முறையாகப் பயிற்சிபெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 58 அர்ச்சகர்கள் நியமனம் குறித்து சிலர் அவதூறாக தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில ஊடகங்களும், ஒரு…

மேலும்...

சென்னையில் இலவச வை-ஃபை WI-FI !

சென்னை (17 ஆக 2021): சென்னையில் 46 இடங்களில் WI-FI ஸ்மார்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் 30 நிமிடங்களுக்கு இலவச WI-FI தொடர்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தகவல் தெரிந்துகொள்ளலாம். WI-FI வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கம்பங்களில் கூடுதல் வசதிகளும் இடம்பற்றுள்ளது. WI-FI வசதியைப் பெறுவதற்கு மொபைல் எண்ணைப் பதிவு செய்து ஒடிபி மூலம் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ளலலாம்….

மேலும்...

அந்த ஒரு விஷயம்தான் கவலை அளிக்கிறது – முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!

சென்னை (14 ஆக 2021): தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறை பட்ஜெட்டை வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார் பொது நிதிநிலை அறிக்கையைத் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (13.08.2021) சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்த நிலையில், வேளாண்துறை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ”100 நாட்கள் ஆட்சி குறித்து சபையில் இருக்கும் நீங்கள் எவ்வளவு பாராட்டினாலும் எனக்கு,…

மேலும்...

தமிழகத்தில் இன்று முதல் பெட்ரோல் விலை குறைப்பு!

சென்னை (14 ஆக 2021): தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்ட நிலையில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில்…

மேலும்...