தமிழகம் முழுவதும் கோவில்களில் தரிசனத்திற்கு தடை!

சென்னை (01 ஆக 2021): தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா 3 ஆம் அலை பரவல் அச்சம் இருப்பதால், தொடக்கத்திலேயே அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு…

மேலும்...

தமிழக கர்நாடக பாஜக-வினர் இடையே நடைபெறும் உச்சபட்ச காமெடி!

பெங்களூரு (31 ஜூலை 2021): கர்நாடகா பாஜக திட்டத்தை தமிழக பாஜகவினர் எதிர்ப்பதும், மத்தியில் ஆளும் பாஜக அதை பார்த்து கொண்டிருப்பதும் பெரிய நகைச்சுவை என்று அரசியல் ஆர்வலர்கள் கிண்டல் அடிக்கின்றனர். கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்ட நிலையில், மேகதாது அணையை குறித்து சபதம் எடுத்துக் கொண்ட விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வரின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா…

மேலும்...

பாஜக அரசை எதிர்த்து பாஜக போராட்டம்!

சென்னை (29 ஜூலை 2021): கர்நாடக பாஜக அரசை எதிர்த்து, தமிழக பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தஞ்சாவூரில் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்...

தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்கு சவூதி அரசு கடும் எச்சரிக்கை!

ரியாத் (28 ஜூலை 2021): கோவிட் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நாடுகளுக்கு செல்லும் சவூதி நாட்டினருக்கு சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாயன்று சவுதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதி நாட்டினர் தடைசெய்யப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்வது வெளிப்படையாக மீறுவதாகும். சவூதி அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களை மீறி பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளுக்கு குடிமக்கள் பயணம் செய்வது குறித்து தகவல்கள் வந்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடி நிரூபிக்கப்பட்டால் சட்ட பொறுப்புணர்வு மற்றும் கடுமையான…

மேலும்...

இளைஞர் உயிரோடு எரிப்பு – பாஜக நிர்வாகி கைது!

புதுச்சேரி (27 ஜூலை 2021): புதுச்சேரியில் இளைஞர் ஒருவரை உயிரோடு எரித்த புகாரில் பாஜக நிர்வாகி மற்றும் அவருடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ மௌரியா. மாநில பாஜக வணிக பிரிவு அமைப்பாளராக உள்ள இவர், மேட்டுப்பாளையம் சந்திப்பில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது பெட்ரோல் பங்க்கிற்கு நள்ளிரவு திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் வந்துள்ளார். அப்போது ராஜ மௌரியா, சதீஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது….

மேலும்...

யுவன் சங்கர் ராஜா இசையில் ஒலிம்பிக் பாடல் – முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

சென்னை (26 ஜூலை 2021): ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயற்றி இசையமைத்த “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்…

மேலும்...

1455 கிலோ குட்கா பதுக்கல் – சிக்கிய பாஜக நிர்வாகி!

சென்னை (25 ஜூலை 2021): ஆத்தூர் அருகே, 1455 கிலோ குட்கா பொருட்கள் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அடுத்த இரண்டு மாத்திகுள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க, அதன் விற்பனையை முழுமையாக தடுக்கவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில், போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்யவும் தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்….

மேலும்...

4 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி வீண் – அமைச்சர் தகவல்!

சென்னை (18 ஜூலை 2021): “அதிமுக ஆட்சியில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 838 டோஸ் தடுப்பூசிகள் வீணாக்கப் பட்டுள்ளன!” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மீனம்பாக்கத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 32 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகத் தெரிவித்தார். திமுக அரசு பதவியேற்ற பிறகு நாளொன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 61 ஆயிரத்து 297 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு…

மேலும்...

முதல்வர் ஸ்டாலின் மீண்டும் டெல்லி பயணம்!

சென்னை (18 ஜூலை 2021): தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக இன்று மாலை மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார். நாளை பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுகிறார். அதேபோல் அண்மையில் தமிழகத்திற்கு ஒன்றிய அரசால் ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் அளவு குறைவாக உள்ளதால் மக்கள் தொகை…

மேலும்...

திமுகவில் சங்கமமாகும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்!

சென்னை (17 ஜூலை 2021): ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். அரசியலிலிருந்து விலகிய ரஜினி ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைத்தார். இதையடுத்து சில நிர்வாகிகள் ரசிகர் மன்றத்திலிருந்து விலகினர். அதன் தொடர்ச்சியாக, மாரியம்மாள் (திண்டுக்கல்), சத்யா செல்வராஜ் (கடலூர்), விஜய லட்சுமி ரோபர்ட் (காஞ்சிபுரம்), அமுதா (தஞ்சாவூர்), கவிதா (திருவண்ணாமலை), கீதா கலைவாணி (கோயம்புத்தூர்), யமுனா (விழுப்புரம்), சத்யா மகாலட்சுமி (திருவள்ளூர்), பிரேமா (நீலகிரி), இன்பவள்ளி (மதுரை) ஆகிய…

மேலும்...