காண்டம் கருத்தடை மாத்திரைகளுக்கு டாட்டா – வருகிறது புதிய கண்டுபிடிப்பு!
ஜார்ஜியா (11 ஜூன் 2019): குழந்தை பிறக்காமல் இருக்க இனி காண்டம், மாத்திரைகள் தேவையில்லை. அதற்குப் பதிலாக மோதிரம் போன்ற பொருள் உபயோகத்திற்கு வருகிறது. ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெண்களுக்காக கருத்தடை ஹார்மோன்கள் கலந்த கம்மல், மோதிரம், வாட்ச், நெக்லஸ் ஆகிய அணிகலன்களை வடிவமைத்துள்ளனர். இவற்றை அணிந்து கொள்வதால், அதிலுள்ள ரசாயனம் தோல் வழியாக ரத்தத்தில் ஊடுருவி கருத்தரிக்காமல் தடுக்கும். ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள இந்த அணிகலன், ஒரிரு நாட்கள் மட்டுமே ஹார்மோன்களை ரத்தத்தில்…