சவூதி அரேபியாவில் சமூக கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை!

Share this News:

ரியாத் (09 ஆக 2021): சவூதி அரேபியாவில் கோவிட் பரவலை தடுக்கும் ஒரு பகுதியாக சமூக கூட்டங்களுக்கான தடை தொடரும் என்று சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட் பரவலை தடுக்க கடந்த வருடம் முதல் தொடரும் இந்த தடை இப்போது தொடரும் என்று சவூதி சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருமண மண்டபங்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள் போன்ற இடங்களில் கூடும் கூட்டங்கள் அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளது. கோவிட் பெருக்கத்திற்கு இத்தகைய கூட்டங்களே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும், இதுபோன்ற நிகழ்வுகளில் முதியவர்களும் குழந்தைகளும் கலந்து கொள்வதால், அவர்களுக்கு எளிதில் நோயை பரப்பும் வாய்ப்பு அதிகம்.

சவூதியில் பெரும்பாலான மக்கள் இன்னும் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெறவில்லை என்பதும் இந்த தடை தொடர மற்றொரு காரணம். இந்த உத்தரவுகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் சுகாதரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *