சவூதி அரேபியாவுக்கு பொறியாளர் வேலைக்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Share this News:

ரியாத் (21 ஜன 2021): வெளிநாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பொறியாளர் பணிக்கு வருவதற்கு முன்பு தொழில்முறை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொறியியல் பணிகளின் தரத்தை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள பொறியியலாளர்களும் தகுதித் தேர்வை பல்வேறு கட்டங்களில் முடிப்பார்கள்.

தற்போது நாட்டில் பணிபுரியும் தகுதிவாய்ந்த வெளிநாட்டு பொறியியலாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்முறை தேர்வு கடந்த மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, புதிய பணி விசாக்களில் வரும் பொறியாளர்களுக்கு தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. புதிய விதிகளின்படி, புதிய விசா வைத்திருப்பவர்கள் சவுதி அரேபியாவுக்கு வருவதற்கு முன்பு அந்தந்த நாடுகளில் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதன்படி சவூதி பொறியாளர்கள் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மற்றும் குறைந்தது ஐந்து வருட பணி அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே சவுதி அரேபியாவில் பொறியியல் துறையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *