கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்க்க மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது!

Share this News:

ரியாத் (13 ஆக 2021): சவூதியில் ‘தவக்கல்னா’ அப்ளிகேஷனை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சவூதியில் ‘தவக்கல்னா’ என்ற அப்ளிகேஷன் அனைவருக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் அரசு சார்ந்த பல சொந்த விவரங்கள் அந்த அப்ளிகேஷனில் உள்ளடக்கியிருக்கும்.

கொரோனா பாதித்தவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டது உறுதி செய்யப்பட்டவை அனைத்தும் அதில் பதிவாகியிருக்கும்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இரு டோஸ் தடுப்பூசி போட்டதுபோல் மோசடி செய்ய உதவியதாக சிரியாவை சேர்ந்த இருவரையும், பங்களாதேஷை சேர்ந்த இருவரையும் ரியாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலி பெயர்களில் மொபைல் சிம் கார்டுகளை ஏற்பாடு செய்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் சிரமம் உள்ளவர்களுக்கு உதவி வழங்குவதாகவும், புதிய வங்கிக் கடன்களைப் பெற உதவி வழங்கியதாகவும் அவர்கள் மீது போலீசார் மோசடி குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் பொது வழக்கு விசாரணைக்கு ஒப்படைக்கப் பட்டுள்ளதாக ரியாத் காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *