ஹஜ் 2021 – இன்று அரஃபா தினம்: பத்து மொழிகளில் அரஃபா உரை மொழிபெயர்ப்பு!

Share this News:

மக்கா (19 ஜுலை 2021): ஹஜ்ஜின் முக்கிய நிகழ்வான அரஃபா தினம் இன்று நடைபெறுகிறது.

கோவிட் பரவலை அடுத்து நடைபெறும் இரண்டாவது ஹஜ்ஜில் இவ்வருடம் 60 ஆயிரம் ஹாஜிகள் பங்கு கொள்கின்றனர்.

கோவிட் கட்டுப்பாடுகளுடன், சுகாதரத்துறை முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் இன்று ஹஜ்ஜின் மிக முக்கியமான நிகழ்வான ‘அரஃபா கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக, யாத்ரீகர்கள் காலையிலிருந்து அராபாவுக்கு புறப்படுச்சென்றார்கள் .

ஹஜ் யாத்ரீகர்கள் 3,000 பேருந்துகளில் அராபாவுக்கு பயணம் மேற்கொண்டனர். சவூதி அரசின் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் பேருந்துகள் அரஃபாவுக்கு சென்றன. அரபா கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஹஜ்ஜின் கடமை நிறைவேறாது என்பதால் சரியான நேரத்தில் அரஃபாவுக்கு பேருந்துகள் செல்ல திட்டமிடப்பட்டது.

அரஃபா மசூதிக்குள் குறைந்த எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அரஃபா விரிவுரை பத்து மொழிகளில் நேரடியாக மொழிபெயர்க்கப்படும். பின்னர், லுஹர் மற்றும் அஸ்ர் தொழுகைகள் ஒன்றாக நிகழ்த்தப்படும்.

மழை, வெயில், மண் தூசி உள்ளிட்ட இயற்கை இடர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு தேவையான ஏற்பாடுகளை சவூதி அரசு செய்துள்ளன. ‘அரபா பிரசங்கத்திற்குப் பிறகு, யாத்ரீகர்கள் மாலை சூரிய அஸ்தமனம் வரை’ அராபாவில் தங்குவர். பின்பு இரவு முஸ்தலிஃபாவுக்குத் திரும்புகிறார்கள். அதனை தொடர்ந்து நாளை காலை ஹாஜிகள் மினாவுக்கு வந்து பிற ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *