புகைப்படத்தைப் பரப்பினால், ஒரு லட்சம் ரியால் அபராதம்!

Share this News:

தோஹா (05 ஆகஸ்ட் 2025):  முன் அனுமதி பெறாமல் ஒருவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் பரப்பினால், ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 100,000 கத்தார் ரியால் அபராதம் (இந்திய ரூபாய் மதிப்பில் 23.5 லட்சம்) விதிக்கப்படும் என கத்தார் நாடு அறிவித்துள்ளது.

இதற்குரிய சட்டத் திருத்தங்களை இன்று கத்தார் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது சைபர் குற்றமாகக் கருதப்படும் என்றும் அறிவித்துள்ளது.

கத்தார் நாட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் வருகை தரும் சுற்றுலா பயணிகள், நகரின் பொது இடங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது அதிகரித்துள்ளது.

இத்தகைய வீடியோக்களில்,  தொடர்பு இல்லாத தனி நபர்களின் செயல்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத் தளங்களில் பரப்பப் படுவது பற்றி சமீபத்தில் அரசுக்கு புகார்கள் குவிந்துள்ளன.

மேலும், விபத்துகள் போன்ற ஆபத்தான சூழ்நிலையை வேடிக்கை பார்ப்போர், வீடியோக்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் கத்தார் நாட்டில் குற்றமாகக் கருதப்படும். ஒரு லட்சம் ரியால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.இந்நேரம்.காம்

இத்தகைய புகார்களைத் தொடர்ந்து இந்த சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது.


Article (8) (bis) states:

“Punishment by imprisonment for a term not exceeding one year, and by a fine not exceeding (100,000) one hundred thousand Qatari Riyals, or by either of these two penalties, shall be inflicted upon anyone who infringes upon the privacy of individuals while they are in a public place, by publishing or circulating images or video clips of them without their consent or in circumstances not permitted by law, through information network or any other information technology.”


மேலும், இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. – இந்நேரம்.காம்


Share this News: