கொரோனா விவகாரம் – சவூதியில் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்!

Share this News:

ரியாத் (15 மே 2021): சவூதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் COVID-19 தடுப்பூசி போட வேண்டும் அல்லது வாராந்திர பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவை சவூதி அதிகாரிகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் அறிமுகப்படுத்திய இந்த நடவடிக்கைகளின்படி, முடிதிருத்தும் கடைகள் மற்றும் பெண்களின் அழகு நிலையங்களில் பணிபுரிபவர்கள், உணவகங்கள், கஃபேக்கள், உணவு விற்பனை நிலையங்களில் உள்ள அனைவரும் கொரோன தடுப்பூசி செலுத்தியவர்களாக இருக்க வேண்டும் இல்லையேல் வாரம் ஒரு முறை பிசிஆர் டெஸ்ட் செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த நடவடிக்கை மே 13 வியாழக்கிழமை முதல் இந்த முடிவு நடைமுறைக்கு வந்தது.

மேலும், இதேபோன்று சவூதி முழுவதும் உள்ள அனைத்து ஜிம்கள் மற்றும் விளையாட்டு மையங்களின் தொழிலாளர்களும் தடுப்பூசி எடுக்கத் தவறினால், அவர்கள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கிடையே உள்ள இடைவெளியில் பி.சி.ஆர் சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும்.

ரயில்கள் மற்றும் பேருந்துகள் உட்பட பொதுப் போக்குவரத்து சேவைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் பரவலை லட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

எல்லோரும் தங்கள் பெயரை சேஹாத்தி அப்ளிகேசன் மூலம் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *