சவூதி மக்காவில் உம்ரா கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

Share this News:

மக்கா (26 டிச 2020): புதிய கோவிட் வைரஸின் பயம் தொடரும் நிலையில் , மக்காவில் உள்ள ஹராமில் கட்டுப்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனில் புதிய கோவிட் வைரஸின் பரவல் அதிகரித்திருப்பதால் சவூதி அரேபியா சர்வதேச விமான சேவை கடல் போக்குவரத்து ஆகியவற்றை ஒருவாரம் நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கிடையே ஏற்கனவே கோவிட்டின் கட்டுப்பாடு மக்கா ஹரமில் உள்ள நிலையில், புதிய சூழ்நிலைக்கேற்ப மேலும் கட்டுப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களின் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​மக்காவில் சுமார் 300 உம்ரா யாத்ரீகர்கள் உள்ளனர். ஹஜ் அமைச்சின் அறிவுறுத்தலின் படி அவர்களுக்கு உம்ரா ஏஜென்சிகளால் அனைத்து வகையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *