ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்!

சென்னை (31 அக் 2021): நடிகர் ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். திடீர் உடல்நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்தார். ரஜினி…

மேலும்...

ரஜினியின் மக்கள் மன்றம் கலைப்பு – நடிகர் ரஜினி பரபரப்பு தகவல்!

சென்னை (12 ஜூலை 2021): “அரசியலுக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம், முழுமையாக கலைக்கப்படுகிறது!” என நடிகர் ரஜினி இன்று அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்து தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) திட்டமிட்டிருந்தது. ஆனால் ‘உடல் நிலை ஒத்துழைக்காததால் அரசியலுக்கு வரப்போவதில்லை!’ என கடந்த தேர்தலுக்கு முன்பு ரஜினி அறிவித்தார். பின்பு அண்ணாத்தே படப்பிடிப்புக்கு போனார். பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி, தமது…

மேலும்...

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு – அப்பல்லோவில் அனுமதி!

ஐதராபாத் (25 டிச 2020): நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமக ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினி அண்ணாத்தே படப்பிடிப்பில் இருந்த நிலையில் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ரஜினிக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் கோவிட் பாதிப்பு இல்லை என உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகவே ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். எனினும்…

மேலும்...