கேவலப்பட்ட குஜராத் மாடல் – விசாரணை நடத்த அமெரிக்கா உத்தரவு!
அகமதாபாத் (03 ஜூலை 2022): குஐராத்தில் தேர்தல் முறைகேடு மூலம் அமெரிக்கா சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர்களால் ஆங்கிலத்தில் உரையாட முடியாமல் நின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆங்கில திறனறிவு தேர்வான ஐஇஎல்டிஎஸ் தேர்வில், முறைகேடாக மதிப்பெண் பெற்றிருந்தது…